26
தமிழக ஆட்சி
கோவில்களுக்கு யாத்திரையாகச் சென்றனர். ஐயடிகள் காடவர்கோன் பல தலங்களைத் தரிசித்து க்ஷேத்திர வெண்பாப் பாடினர். மூன்றாம் நந்திவர்மனை கழற்சிங்கன் தலயாத்திரை செய்தான். பாண்டியன் நெடுமாறன் தல யாத்திரை செய்தான். பிற்காலச் சோழரும் பாண்டியரும் தலயாத்திரை செய்தனர் என்பது தெரிகிறது.
சமுதாய ஒழுங்கைக் காப்பதில் அரசன் இரு வேறுபட்ட கடமைகளைப் பெற்றிருந்தான். சமுதாய அமைப்பு, சமயம், தொன்று தொட்டு வரும் பழக்க வழக்கங்கள், அற நிலையங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பது ஒன்று. காலத் திற்கு ஏற்பச் சமுதாயத்தை மாற்றியமைத்தல் என்பது மற்றாென்று.
குடிமக்களது பொருளாதாரத் துறையிலும் உதவி புரிதல் அரசனது கடமையாகும். பயிர்த்தொழில், கைத் தொழில், வாணிகம் என்ற மூன்றையும் அரசன் ஆதரித் தான். பல காடுகள் அழிக்கப்பட்டு விளைநிலங்கள் ஆக்கப்பட்டன. புதிய சிற்றுார்கள் தோற்றுவிக்கப்பட்டன. ஆறு களுக்குக் கரைகள், ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டப் பட்டன; உயர்த்தப்பட்டன. அவற்றிலிருந்து கால்வாய்கள் வெட்டப்பட்டன. நாடெங்கும் நீர் வசதி உண்டாக்கப்பட்டது. ஆற்றுப்பாய்ச்சல் இல்லாத இடங்களில் பெரிய குளங்களும் ஏரிகளும் வெட்டப்பட்டன. அவற்றில் மழை நீர் தேக்கப்பட்டது. அவற்றிலிருந்து கால்வாய்கள் மூலம் வயல்களுக்கு நீர் கொண்டு செல்லப்பட்டது.
விளைபொருள்களும் செய்பொருள்களும் உள் நாடு களிலும் வெளிநாடுகளிலும் விற்பதற்கு அரசாங்கம் உதவி யளித்தது. ஏற்றுமதி இறக்குமதிக்குரிய துறைமுகங்கள் பாதுகாக்கப்பட்டன. கப்பல் கொள்ளைக்காரர்கள் தண்டிக்கப்பட்டனர்.