பக்கம்:தமிழக ஆட்சி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசுரிமை

27



சேரநாட்டை அடுத்த கடற்பகுதியில் சில தீவுகளில் மறைந்திருந்து வணிகர் கப்பல்களைக் கொள்ளையிட்டு வந்த ‘கடம்பர்’ என்ற கூட்டத்தாரை நெடுஞ்சேரலாதனும் செங்குட்டுவனும் நிலை குலையச் செய்தனர் என்று பதிற்றுப்பத்துக் கூறுகின்றது. முதல் இராசேந்திரசோழன் தன் போர்க் கப்பல்களை அனுப்பி மலேயா, கிழக்கிந்தியத் தீவுகள் ஆகியவற்றில் பல பகுதிகளை வென்றது, சோழ நாட்டு வாணிகத்தை நிலை நிறுத்தவே ஆகும் என்று வரலாற்று ஆசிரியர் கருதுகின்றனர்.

தமிழரசர் ரோமப்பேரரசர்களோடும், சீனப்பேரரசர் களோடும், பிற்வெளிநாட்டு அரசர்களோடும் நல்லுறவு கோண்டு கடல் வாணிகத்தை வளர்த்தனர் என்பதைத் தமிழக வரலாற்றால் அறிகின்றோம். வாணிகத்தின் பொருட்டுத் தமிழ்நாட்டுத் துறைமுக நகரங்களில் அயல் நாட்டு வணிகர் உயர்ந்த வளமனைகளில் தங்கியிருந்தனர் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது.[1]

இசை, நடனம் முதலிய நுண்கலைகளை வளர்த்து ஊக்குவதும் அரசன் கடமையாகும். சோழ மன்னன் மாதவியின் நடன அரங்கேற்றத்திற்குத் தலைமை தாங்கி, அவளுக்குத் தலைக்கோலி என்ற பட்டத்தையும் ஆயிரத் தெண்கழஞ்சு பொன்னையும் பசும் பொன்மாலையையும் பரிசு வழங்கினன் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது.[2]

அரசுரிமை

அரசனாக இருந்து ஆட்சி அநுபவம் பெற்றவரது மரபில் வந்தவரே அடுத்து அரசராக வருவது மரபாக இருந்தது.


  1. “கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
    பயனற வறியா யவனர் இருக்கை.”
    -காதை 5. வரி 9-10.
  2. சிலம்பு, அரங்கேற்று காதை, வரி 159-163.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/34&oldid=505224" இலிருந்து மீள்விக்கப்பட்டது