பக்கம்:தமிழக ஆட்சி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

தமிழக ஆட்சி



அஃதாவது, அரசன் மகனே பொதுக்கல்வி கற்ற பிறகு இளவரசனுக முடிசூடித் தந்தையிடமே அரசியல் பயிற்சியைப் பெறுதல் வழக்கம். அரசனுக்கு மனைவியர் பலர் இருப்பினும், அவருள் மூத்தவள் மகனே பட்டத்திற்கு வருதல் மரபு. மூத்தவளுக்குப் பிள்ளை இல்லையாயின், எந்த மனைவிக்குப் பட்டத்துக்குரிய மகன் இருந்தானோ அவனை இளவரசனாக ஏற்றுக்கொள்ளுதல் மரபு.

அரசன் பிள்ளேயின்றி இறந்தால், அல்லது பிள்ளை இல்லை யென்ற உறுதி ஏற்படின், அரசனது தம்பி அல்லது நெருங்கிய உறவினர் பட்டத்தைப் பெறுதல் இயல்பு. பாண்டியன் நெடுஞ்செழியன் இறந்தவுடன் கொற்கையிலிருந்த வெற்றி வேற்செழியன் அரசனானான் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. சுந்தரசோழன் இறந்தவுடன் அவனது ஒன்றுவிட்ட தம்பியான உத்தம சோழன் பட்டத்தை அடைந்தான். அவனுக்குப் பிறகு சுந்தர சோழனது இரண்டாம் மகளுண முதல் இராசராசன் பட்டத்தை அடைந்தான். முதல் இராசாதிராசன் பிள்ளையின்றி இறந்தான். ஆதலால் அவன் தம்பியான இரண்டாம் இராசேந்திர சோழன் அரியணை ஏறினன். அவன் தம்பி வீர ராசேந்திரன் மணி முடி சூடினான்.

ஒரு பரம்பரையைச் சேர்ந்த இறுதி அரசன் பிள்ளையின்றி இறந்தால், பங்காளிப் பரம்பரையினரில் தகுதியுடைய ஒருவர் பட்டத்தைப் பெறுதலும் உண்டு. பல்லவ அரசருள் இரண்டாம் பரமேஸ்வரன் பிள்ளையின்றி இறந்தான். உடனே அரசியல் அதிகாரிகள் சிம்ம விஷ்ணுவின் தம்பியான பீம வர்மன் மரபில் வந்த பல்லவ மல்லனப் பல்லவ அரசனுக் கினர், அவன் தன் தந்தைக்கு மூத்த மகன் அல்லன்: கடைசி மகன். முதல் மூவரும் அரசராக மறுக்கவே, பன்னிரண்டு வயதுடைய பல்லவ மல்லன் விருப்பத்தோடு முடி சூடிக் கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/35&oldid=505225" இலிருந்து மீள்விக்கப்பட்டது