பக்கம்:தமிழக ஆட்சி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசுரிமை

29



ஆண் பிள்ளைகள் மரபில் அரசுபுரிய பிள்ளையில்லாவிடில், பெண் பிள்ளைகள் வழியில் பிறந்த ஆடவனே அரசனுக்குதலும் வழக்கமாக இருந்து வந்தது. முதல் இராசராசன் பகளான குந்தவ்வை கீழைச் சாளுக்கிய விமலாதித்தனை மணந்தாள். அவ்விருவருக்கும் இராசராச நரேந்திரன் என்பவன் பிறந் தான். அவன் கங்கை கொண்டசோழன் மகளான அம்மங்கா தேவியை மணந்து கொண்டான். அவ்விருவருக்கும் பிறந் தவன் முதற் குலோத்துங்கன். இவன் சாளுக்கிய-சோழன். வீரராசேந்திரன் மகனை அதிராசேந்திரன் இறந்தவுடன், ஆண்வழியில் பின்ளே இல்லாததால், பெண் வழியைச் சேர்ந்த முதற்குலோத்துங்கனே சோழப் பேரரசனாக முடிசூடிக்கொண்டான்.

இவ்வாறே இரண்டாம் இராசராசன் இறந்த பிறகு, ஆண் வழியில் பிள்ளையில்லாததால், விக்கிரமசோழனது மகள் வயிற்றுப் பேரனான எதிரிலிப்பெருமாள் என்பவன் இரண்டாம் இராசாதிராசனாக முடிசூடிக் கொண்டான்.

ஒரு நாட்டில் பேரரசன் முடிமன்னனாக இருக்கும் பொழுது, அவன் தம்பியர் நாட்டின் சில பகுதிகளை அவனுக்கு அடங்கி ஆண்டு வருதல் உண்டு. கி. பி. 13-ஆம் நூற்றாண்டில் மாறவர்மன் குலசேகர பாண்டியன் பாண்டிய நாட்டில் முடியரசனக விளங்கினான். அதே காலத்தில் பாண்டிய நாட்டின் பல பகுதிகளை அவன் உடன் பிறந்தார் நால்வர் ஆண்டு வந்தனர். இங்ஙனம் மூத்தவனுக்கு அடங்கி இளையவர் நாட்டின் சிலபகுதிகளை ஆளுதல் வழக்கம். முதற் குலோத்துங்கன் தன் மக்களையும் உறவினர்களையும் மாகாணத் தலைவர்களாக நியமித்தான்.

பட்டத்திற்குரிய மைந்தன் இல்லாவிடில் அமைச்சரும் உயர் அலுவலரும் சான்றோரும் பட்டத்து யானையை வெளியில் ஏவி விடுதல் வழக்கம்: அது எவனத் தன் முதுகின்மீது ஏற்றிக்கொண்டு வருகிறதோ அவனே அரசனாக்குவது அக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/36&oldid=510583" இலிருந்து மீள்விக்கப்பட்டது