பக்கம்:தமிழக ஆட்சி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

தமிழக ஆட்சி



கால வழக்கம். அங்ஙனம் தேர்ந்தெடுக்கப்பட்டவரே களப் பிரர் காலத்தில் மதுரையில் வணிகராயிருந்த மூர்த்தி நாயனர் என்பவர்.[1]


முடிசூட்டு விழா


முடி சூடிக்கொண்ட பின்னரே ஒருவன் சட்டப்படி அரசனுகிருன்; ஆட்சி உரிமையைப் பெறுகிருன். அதற்ைருன் முதலாம் இராசா திராசன் கொப்பம் போர்க் களத்தில் இறந்தபோது இளவரசனை அவன் தம்பி இரண்டாம் இராசேந்திரன் அப்போர்க்களத்திலேயே முடி சூடிக்கொண் டான். இதனை நோக்க, முடிசூட்டு விழா அரசியல் சிறப்பு வாய்ந்தது-சட்டதிட்ட முக்கியத்துவமும் வாய்ந்தது. என்பதை அறியலாம்.

முடி சூடிக்கொள்பவனுக்கு இன்ன வயது இருக்க வேண்டும் என்னும் வரையறை இல்லே. சங்க காலக் கரிகாற் சோழன் ஐந்து வயதில் முடி சூட்டப்பெற்றான் என்று ஒரு பழம்பாடல் கூறுகிறது. தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் பகைவரை வென்று மீண்ட பொழுது, ‘தாலி களைந்தன்றும் இலனே’ என்று இடைக் குன்றுார் கிழார் என்ற புலவர் வியந்து பாராட்டினர்.” அதாவது, திருஷ்டி, தோஷம் முதலியன தாக்காதிருப் பதற்குப் பிள்ளைப் பருவத்தில் கழுத்தில் கட்டப்படும் ஐம்படைத்தாலி, இளைஞனனதும் நீக்கப்படுதல் மரபு. அரசனை நெடுஞ்செழியன் அதை நீக்கவில்லை என்பது, அவனது மிக்க இளமையைக் கு றி த் த வ |ா ரு ம்.

2. ‘அஞ்சின் முடிகவித் தைம்பதாம் ஆண்டளவில்

கஞ்சிக் காவேரி கரைகண்டு’ - -பெருந்தொகை, செ. 779. 3. புறநானூறு, செ. 77.


  1. 1. பெரிய புராணம்-மூர்த்திநாயனார் புராணம், செ. 27.44.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/37&oldid=573555" இலிருந்து மீள்விக்கப்பட்டது