பக்கம்:தமிழக ஆட்சி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

தமிழக ஆட்சி



என்ற ஆறுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட நீர் அவர் மீது சொரியப்பட்டது. நான்மறையாளர் வேதமந்திரங்களே ஒலித்துக்கொண்டிருந்தனர்; பல்லியங்கள் ஒலித்துக்கொண் டிருத்தன. பின்பு அவர் தங்க நாணயங்களாலும் நவமணி களாலும் அபிஷேகம் செய்யப்பட்டார். பின்பு சத்தனம், கத்துாரி முதலிய மணப் பொருள்கள் அவர் உடம்பில் பூசப் பெற்றன.

அபிடேகத்திற்குப் பின்னர்த் தங்கப் பட்டம் அரசர் நெற்றியில் கட்டப்பட்டது; தலையில் முடி சூட்டப்பெற்றது. இங்ஙனம் பட்டம் கட்டப்பெறுவதால் பட்டாபிஷேகம் என்றும், தலையில் மகுடம் சூட்டப்பெறுவதால் மகுடாபிஷேகம் என்றும் முடிபுனைவிழா இருவகைப் பெயர்களைப் பெற்றது. இந் நிகழ்ச்சிகளுக்குப் பின்னரே அரச சின்னங்கள் வழங்கப் படும். அந்த விடிை முதல் அவர் அரசுரிமையை ஏற்றுக் கொண்டார் என்பது பொருள்: அப்பொழுதுதான் தம் பெயரில் அரசியல் ஆணைகளைப் பிறப்பிக்க உரிமை உடையவர் ஆனர். இத்தகைய சடங்குகளைக் கொண்டிருத்தலால் முடி சூட்டு விழா அரசியல் சிறப்புப் பெற்றதாகும்.

திருமுழுக்குப் பெயர்

முடிசூட்டு விழாவின்போது அரசனுக்குத் திருமுழுக்குப் பெயர் (அபிஷேக நாமம்) இடப்படும். பல்லவ மல்லன் (இரண்டாம்) நந்திவர்மன் என்ற அபிஷேக நாமம் பெற்றான். அருண்மொழி வர்மன் பட்டம் பெற்றதும் முதலாம் இராச ராசன் என்று பெயர் பெற்றான். இராசேந்திரன் என்று. அழைக்கப் பெற்றவன், பட்டம் பெற்றதும் முதல் குலோத்துங்கன் எனப்பட்டான். எதிரிவிப்பெருமாள் பட்டம் பெற்றதும் (இரண்டாம்) இராசாதிராசன் எனப்பட்டான்.”

1. இராய வாசகம், பக். 17-19. 2. தானர்ணவன் வேங்கி வேந்தனக முடி சூடியபோது சளுக்கி வீமன் என்ற அபிஷேக நாமத்தைப் பூண்டான்.

. . - --வேங்கிச் சாளுக்கியர், பக். 207

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/39&oldid=573557" இலிருந்து மீள்விக்கப்பட்டது