உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக ஆட்சி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பதிப்பின் முன்னுரை

மூன்றாண்டு இளங்கலை (B. A.) வகுப்புக்கும், முது கலை (M. A.) வகுப்புக்கும் உள்ள புதிய பாடத் திட்டத்தில் ‘தமிழக வரலாறும் பண்பாடும்” என்னும் புதிய பாடம் கற்பிக்க வேண்டும் நிலைமை ஏற்பட் டுள்ளது. யான் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் இரண்டாண்டுகளாக இப்புதிய பாடத்தைக் கற்பித்து வருகின்றேன். இப்பாடத்திற்கென்று ஒரு தனி நூல் இன்மையால், ஆராய்ச்சி நூல்கள் பலவற்றைப் படித்துச் செய்திகளைத் தொகுத்து முறைப்படுத்தி மாணவர்க்கு அறிவித்து வருகின்றேன். பல்லவர் வரலாறு எழுதத் தொடங்கியது முதல் யான் தொகுத்து வைத்திருந்த கல்வெட்டுக் குறிப்புக்களும் இலக்கியக் குறிப்புகளும் இப் பாடத்திற்குப் பெருந்துனே செய்கின்றன.

‘தமிழக வரலாறும் பண்பாடும்’ என்ற பாடத்தின் ஒரு பிரிவே தமிழக ஆட்சி என்பது. தமிழ் இலக்கியம், சமகால இலக்கியம், அயலார் இந்நாடு பற்றி எழுதியுள்ள குறிப்புக்கள், கல்வெட்டுக்கள், கட்டடங்கள் முதலியன, வழக்கில் உள்ள வரலாற்றுச் செய்திகள் என்பன இதற் குரிய மூலங்களாகும்.

இவற்றைத் துணையாகக் கொண்டு இக்கால அறிஞர் பல அரச மரபுகளைப்பற்றிய வரலாற்று நூல்களே எழுதி யுள்ளனர். அவற்றுள் டாக்டர் மீனட்சி, பேராசிரியர் நீலகண்ட சாத்திரியார் என்பவர் எழுதியுள்ள நூல் களும், டாக்டர் மகாலிங்கம் அவர்கள் எழுதியுள்ள “தென்னிந்திய ஆட்சி’ என்னும் அரிய ஆராய்ச்சி நூலும் இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவையாகும். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/4&oldid=573548" இலிருந்து மீள்விக்கப்பட்டது