அரசுரிமை
33
மன்னன் முடி சூட்டிக்கொண்ட பின்னர்த் தனக்கு நெருக் கமானவருடன் விருந்துண்பான். அவ்வமயம் அவனிடம் அளவு கடந்த பற்றுடைய வீரர்கள் விருந்துண்பர்;, தம் “ அரசன் இறந்தால் தாமும் உடன் இறப்பதாகச் சூள் செய்து கொள்வர். இவர்கள் வேளைக்காரப் படையினர் அல்லது ஆபத்து உதவிகள் என்று பெயர் பெறுவர். இத்ததைய படையினர் பாண்டியனிடம் இருந்தனர் என்று மார்க்கோபோலோ குறித்துள்ளார். இப் படையினர் சேரமான் பெருமாள் நாயனரிடம் இருந்தனர் என்று பெரியபுராணம் பேசுகிறது.”
முடிசூட்டு விழாவுக்கு முன் அவனுக்குத் திருமணம் நடந் திருக்குமாயின், மனேவியும் உடனிருந்து முடி சூடிக் கொள்வாள். அவள் அன்று முதல் கோப்பெருந்தேவி அல்லது மாதேவி என்று அழைக்கப்படுவாள்.
.w. முடிசூட்டு விழாவில் முதலமைச்சனே சிறப்புடை வேலை களைச் செய்வான். இரண்டாம் இராசாதிராசனது முடி சூட்டு விழா அவனது முதலமைச்சர் பல்லவராயரால் நடத்தப் பெற்றது.’ இவ்விழா பெரும்பாலும் அரண்மனை யிலுள்ள திருமுழுக்கு (அபிஷேக) மண்டபத்தில் நடை பெறுதல் வழக்கம். காஞ்சி அரண்மனையிலும், விக்கிரம சோழபுரம் அரண்மனையிலும் இத் திருமுழுக்குமண்ட பங்கள் இருந்தன - அங்கு அழகிய அரியணைகள் இருந்தன என்று கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. தென்காசிப் பாண்டியர் சிலர் தென்காசி விசுவநாதர் திருக்கோயில் மண்ட பத்தில் முடிசூடிக்கொண்டனர் என்று கல்வெட்டுக்கள் குறிக்கின்றன.’
1. பெரிய புராணம், வெள்ளானைச் சருக்கம்,
செ. 37 -38 2. Epigraphia Indica, 21, pp. 185,
3. தென்னிந்தியக் கல்வெட்டுக்கள், III, 73; 261 of 1915. 4. Travancore Archaeological Series,l, 7,10.
3 - -