உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக ஆட்சி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

தமிழக ஆட்சி



பகைவர் நாட்டை வெற்றி கொண்ட மன்னன் பகை வரது தலைநகரில் முடி சூட்டிக்கொள்ளுதல் வழக்கம். அவன் வெற்றிக்கு அறிகுறியாகவும், வீரத்துக்கு அறிகுறியாகவும் இரண்டு முடிகளைச் சூட்டிக்கொள்வான். மூன்றாம் குலோத் துங்கன் கரூரையும் மதுரையையும் வென்று அவ்விடங்களில் வெற்றி முழுக்கும் (விஜயாபிஷேகமும்)வீர முழுக்கும் (வீராபி ஷேகமும்) செய்துகொண்டான். கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் மாறவர்மன் சுந்தரபாண்யடின் உறையூரையும் தஞ்சையையும் வென்று முடி கொண்ட சோழபுரத்திலிருந்த அரண்மனைத் திருமுழுக்கு மண்டபத்தில் வீர முழுக்குச் செய்து கொண்டான்.”

மன்னற்காக ஆட்சி புரிதல்

மன்னன் அரசாள இயலாத சிறுவனுய் இருக்கும் rொழுதும் திறமையற்று இருக்கும் பொழுதும் முதலமைச்சனே மன்னனுக்குப் பதிலாக ஆட்சி புரிதல் உண்டு. இரண்டாம் இராசாதிராசன் இரண்டாண்டுச் சிறுவனுக இருந்தபோது முடி சூட்டப் பெற்றான். பல்லவராயர் என்றமுதலமைச்சரே சோழப் பெருநாட்டைஆட்சி புரிந்தார். மதுரையை ஆண்ட நாயக்கருள் மூன்று மாதச் சிறு குழந்தைக்கு முடி சூட்டப் பெற்றது. அப்பிள்ளையின் பாட்டியான இராணி மங்கம்மாள் அரசன் சார்பில் நாட்டை ஆண்டாள்.”

முடி துறத்தல்

அரசன் நோயுற்று அல்லது முதுமை அடைந்து தன்

மகனையோ பிறரையோ அரசனுக்கி முடி துறத்தல் உண்டு. தொல்காப்பியர் இதனைக் கட்டில் நீத்தல் என்பர் சோளுட்டு

1. 74 of 1895. 2. K. A. நீலகண்ட சாத்திரி, பாண்டிய நாடு, பக். 144. 3. R. சத்தியநாத ஐயர், மதுரை நாயக்கர்,பக். 204. 4. தொல்காப்பியம், புறத்திணை இயல், 76.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/41&oldid=573559" இலிருந்து மீள்விக்கப்பட்டது