அரசுரிமை
35
ஆட்சியைத் தன் மக்கள் இருவரும் விரும்புகின்றனர் என்பதை உணர்ந்தவுடன், கோப்பெருஞ்சோழன் தன் பதவியைத் துறந்தான் என்று புறநானூறு புகல்கின்றது. பிற்காலச் சோழப் பேரரசர் ஒவ்வொருவரும் இளவரசனுக்குப் போதிய அரசியல் அநுபவம் வந்தவுடன் முடி துறத்தலை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
அரசுரிமை
சங்க காலத்தில் அரசன்- அமைச்சர், தானத் தலைவர் முதலிய அரசாங்க உயர் அலுவலருடன் அத்தாணி மண்ட பத்தில் இருந்து அரசியல் செய்திகளைக் கவனித்து வந்தான். அரசனுடன் கோப்பெருந்தேவியும் உடனிருப்பது வழக்கமாக இருந்திருக்கலாம். மலை வளத்தைக் காணச் சென்ற சேரன் செங்குட்டுவைேடு அவன் பட்டத்தரசியும் உடனிருந்தாள் என்பதும், அமைச்சரும் தானேத் தலைவரும் இளங்கோவடி களும் சாத்தருைம் உடனிருந்தனர், என்பதும், “கண்ணகி யைக்கோவில்கட்டி வழிபடவும்’, என்று பட்டத்தரசிதான் சொன்னுள் என்பதும் போன்ற செய்திகளை நோக்கும்போது, அத்தாணி அரசுரிமையும் உடனிருந்திருக்கலாம் என்று கொள்ளுதல் பொருத்தமாகும். இவ்வழக்கம் பிற்காலச் சோழர்காலத்திலும் இருந்தது என்பது, “......புவன முழு துடையாளொடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி வன்மரான பூ குலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு ஒன்பதாவது’ எனவரும் கல்வெட்டால் அறியலாம்.”
அரசன் கழுத்தில் பல வகை மாலைகளை அணிந்திருப் பான்; முன் கையில் கடகம் விளங்கும்; விரல்களில் மோதிரங்கள் இருக்கும் ; காலில் வீரக் கழல் இருக்கும்; உடம்பின்மீது பட்டாடை போர்த்திருப்பான். மாறவர்மன் குலசேகர பாண்டியன் நவமணிகள் பதித்த பலவகை
1. செ, 217. 2. தென்னிந்தியக் கல்வெட்டுக்கள், WI. 327.