பக்கம்:தமிழக ஆட்சி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

தமிழக ஆட்சி



அணிகளை அணிந்திருந்தான் ; விலையுயர்ந்த 100 (108) பெரிய முத்துக்களும் மணிக்கற்களும் இணைக்கப் பெற்ற பட்டுக் கயிற்றை (பட்டு நூல் மாலையை)க் கழுத்திலிருந்து தொங்கவிட்டிருந்தான் ; காலே மாலைகளில் அந்த முத்துக் களையும் மணிகளையும் உருட்டிச் செபித்தான் ; கையில் மிக்க விலையுயர்ந்த முத்துக்கள் பதித்த தங்கக் கடகங்கள் மூன்றை அணிந்திருந்தான் ; கால்களிலும் விலையுயர்ந்த வீரக் கழலை அணிந்திருந்தான் ; கால் விரல்களில் மோதி ரங்களை அணிந்திருந்தான்,’ என்று மார்க்கோபோலோ குறித்துள்ளார்.”

அத்தாணி மண்டபத்தில் அரசன் பொன் அரியணை மீது அமர்ந்திருப்பான். அவன் தலைமீது வெண்கொற்றக் குடை நிழல் செய்யும் ; இரண்டு பக்கங்களிலும் பணிப் பெண்கள் சாமரை வீசவர். அரசியல் உயர் அலுவலரும். நகரப் பெருமக்களும் அவையை அலங்கரிப்பர்.

அரசவையின் உயர்வும் சிறப்பும், அரண்மனை உயர் அலுவலராலும் பணிமக்களாலும் பாதுகாக்கப்பட்டன. அவர்கள் அரசன் பணியிலேயே இருப்பவர்கள், அவர்கள் தலைவன் பிற்காலத்தில் சர்வாதிகாரி எனப் பெயர் பெற்றன். அரசனைக் காண வருவோர்க்கு நேரங் குறித்தல் முதலிய பலவும் இவ்வதிகாரி கவனித்து வந்தான்.

- எப்பொழுதும் அரசனுடன் இருந்து அவன் திருவாய் மலர்ந்தருளிய கட்டளைகளை எழுதுவதும் சிறப்புச் செயல்களை அவன் நினைவுக்குக் கொண்டு வருதலும் அரசனது அந்தரங்கச் செயலாளர் கடமையாகும். அவன் திருமந்திர ஒலை எனப்பட்டான். - .

1. K. A. N. Sastry, Foreign Notices of S. I. P. 164.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/43&oldid=573561" இலிருந்து மீள்விக்கப்பட்டது