பக்கம்:தமிழக ஆட்சி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசுரிமை

41



சங்ககாலத்தில் உறையூரில் முக்காவ னுட்டு ஆமூர் மல்லன் என்று ஒருவன் இருந்தான். அவன் மற்போரில் சிறந்தவன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி என்பவளுல் பொருது கொல்லப்பட்டவன். சாத்தந்தையார் என்ற புலவர் பாக்களால் இச்செய்திகளை அறியலாம். மகாராஷ்டிரர் தஞ்சையை ஆண்டபொழுது இத்தகைய மல்லர்கள் “வஸ்தாதுகள்’ என்று பெயர் பெற்றனர். மதுரையை ஆண்ட விசுவநாத நாயக்கர் பாண்டியன் ஒருவனேடு மற்போர் புரிந்து வெற்றி பெற்றார் என்று நாயக்கர் வரலாறு நவில்கின்றது. | -

அரசன் சூதாடுவதும் உண்டு. இசையரங்கு, நடன அரங்கு, நாடக அரங்கு இவற்றில் அரசன் இருந்து பொழுது போக்குவது உண்டு. வடநாடு சென்று மீண்ட களைப்புத் தீரச் சேரன் செங்குட்டுவன் பரூர்ச் சாக்கையன் நடனத் தைக் கண்டு களித்தான் எனச் சிலப்பதிகாரம் செப்புகிறது.”

சங்ககாலப் பேரரசரும் சிற்றரசரும் இசையில் வல்ல பாணரையும் பாடினியரையும், கூத்தில் வல்ல கூத்தரையும் விறலியரையும் நன்கு ஆதரித்தனர் என்பதைச் சங்க நூல்க பளால் அறியலாம். இரண்டாம் இராசராசசோழன் அவை யில் புலவர் பலர் கூடித் தமிழ்ச் சுவையை எடுத்துப்பாராட் டுவர். அரசன் அவற்றை விரும்பிக்கேட்பான். இதல்ை அவனது புலவர் அவையை, அகத்திய முனிவரும் தமிழ்ச் சங்கமும் இருந்த பொதியின் மலையாக ஒட்டக்கூத்தர் உருவகம் செய்தார். இங்ஙனம் அரசர்கள் புலவர் பெரு மக்களோடு இன்பமாகப் பொழுது போக்குவர். பல்லவ மகேந்திரவர்மன் சிறந்த இசைப்புலவனாகவும் இசை ஆராய்ச்சியில் வல்லவனயும் இருந்தான்; நடனத்தில்

1. புறநானூறு, செ. 80. 2. காதை 28, வரி 65-78.

3. இராசராசன் உலா, கண்ணி 67.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/48&oldid=573566" இலிருந்து மீள்விக்கப்பட்டது