அரசுரிமை
43
.
அறியவும், ஊர் காப்பாளர் இரவில் தம் கடமைகளைச் செய் கின்றனரா என்பதை அறியவும் அரசன் மாறுவேடத்தில்’ நகர்வலம் வருதலும் உண்டு.
பிறந்தநாள் விழா முதலியன
அரசனது பிறந்தநாள் ஆண்டுதோறும் கொண்டாடப் பட்டது. அது பெருமங்கலம் என்று தொல்காப்பியத்தில் பெயர் பெற்றது. அந்நாளில் அரசன் சிறைக் கோட்டத்தைக் காலி செய்வான்; சில வரிகளை நீக்குவான்; பலவகைத் தானங்களைச் செய்வான். முதலாம் இராசராசசோழன் சதய நாளில் பிறந்தவன். ஆண்டுதோறும் அந்தநாள் கொண்டாடப்பட்டது, அவன் சேரநாட்டுத் திருநந்திக் கரையில் இருந்த சிவன் கோவிவில் சதய நட்சத்திர நாளைக். கொண்டாட ஒரு சிற்றுாரையே தானமாக அளித்தான்.”
போரில் சிறந்து விளங்கிய தலைவர்களுக்கும் வீரர்களுக்கும் அவரவர் தகுதிக்கேற்ப அரசன் தனது ஆட்சி மண்டபத்தி லிருந்துகொண்டு ஏளுதி, மாராயன் போன்ற பட்டங்களேயும், மோதிரம் முதலிய பொருள்களையும் வழங்கிச் சிறப்பிப்பது. வழக்கம். பிற்காலச் சோழர் காலத்தில் பிற உயர் அலு: வலர்க்கும் அரையன், பேரரையன் போன்ற பட்டங்கள் வழங் கப்பட்டன.
அரசன் உலாப் போதல் மிகச் சிறந்த நிகழ்ச்சியாகும். பிறந்தநாள் விழா முதலிய சிறப்பு நாட்களில் அரசன் உலாப் போதல் நிகழும் போலும்! உலாப் புறப்படும் மன்னன் முதலில் நீராடி, உயர்ந்த பட்டாடைகளை அணிவான்; தன் வழிபடு கடவுளே வணங்குவான்; பின்பு தான் அணிந்து கொள்ளவேண்டிய விலையுயர்ந்த அணிகளை அணித்துகொள் வான். அவற்றுள் மகர குண்டலங்கள் (காதணி), கேயூரம்.
1. புறத்திணை இயல், கு. 91. . . 2. Travancore Archaeological Series, 1, pp, 291-292.