44
தமிழக ஆட்சி
(தோள்வளை), மணிகள் பதித்த கடகம் (முன்கையணி), “கெளஸ்துபம், முத்துமாலை (மார்பு அணிகள்), உதரபந்தம் (அரைப்பட்டிகை) என்பன குறிப்பிடத்தக்கவை. பின்னர் அரசன் மணிகள் பதித்த முடியைத் தலையில் அணிவான்; அலங்கரிக்கப்பட்ட தனது பட்டத்து யானைமீது ஏறி அமர் வான். அவ்வளவில் வெண்கொற்றக் குடை அவன் தலைக்கு மேல் பிடிக்கப் பெறும்; இரண்டு பக்கங்களிலும் கவரி வீசப் பெறும்; வலம்புரிச் சங்கு ஊதப்பெறும்; மூவகை முரசங்கள் முழங்கும்; வாட்படை வீரர் மன்னனைச் சுற்றி வருவர்; அரசனுக்குரிய கொடி உயர்த்திப் பிடிக்கப்பெறும். யானை மீது வரும் மன்னனுக்கு முன்னும் இரு பக்கங்களிலும் அவனது ஆட்சிக்கு உட்பட்ட சிற்றரசர், அமைச்சர் முதலிய பெருமக்கள் வருவர். இவ்வுலாப்பற்றிய விவரங்களே முவர் உலாவிற் பரக்கக் காணலாம்.’
கோ நகரங்கள்
சங்க காலத்தில் சேரர்க்குக் கருவூரும் (வஞ்சியும்), முசிறி யும் கோநகரங்களாய் விளங்கின; சோழர்க்கு உறையூரும் காவிரிப்பூம்பட்டினமும் தலைநகரங்கள். பாண்டியர்க்கு மதுரை யும், கொற்கையும் தலைநகரங்கள். இவற்றுள் முசிறி, காவிரிப் பூம்பட்டினம், கொற்கை முதலியன துறைமுக நகரங்கள். சேரன் கொங்கு நாட்டை வென்றபோது கொங்குக் கருவூர் சேரர்க்குரிய மற்றாெரு தலைநகரமாயிற்று அவ்வாறே சோழர் தொண்டை நாட்டை வென்ற பிறகு காஞ்சீபுரம் சோழர்க்கு ஒரு தலைநகரமாயிற்று. பல்லவர் காலத்தில் காஞ்சிபுரம் தலை நகரமாகவும், மாமல்லபுரம் துறைமுக நகரமாகவும் விளங்கின. பல்லவர் காலத்தில் சிற்றரசராய் இருந்த சோழர்க்குக் குடந் தையை அடுத்த பழையாறை கோநகராய் இருந்தது. கி. பி. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் தஞ்சாவூர் சோழர் தலைநகர மாயிற்று. கி. பி.11-ஆம் நூற்றாண்டில் கங்கை கொண்ட
1. விக்கிரம சோழன் உலா, கண்ணி 41-90.