46
தமிழக ஆட்சி
ஒவ்வோர் அரண்மனையிலும் வேத்தியல் (கொலு) மண்ட பம், கலைமண்டபம், அரண்மனைத் தோட்டம், விளையாட்டு ‘வெளியிடம், கோவில், போர்க்கருவிகள் வைக்கப்படும் கட்டிடம், அரச குடும்பத்தினர் வாழும் மாடமாளிகைகள் எனப் பல கட்டிடங்களும் பிறவும் அமைந்திருந்தன. அழிந்தன போக இன்று எஞ்சியிருப்பது தஞ்சாவூர் அரண்மனை ஒன்றே. அதனை நேரில் பார்ப்பவர் அரண்மனையின் பல பகுதிகளையும் அவை பயன் பட்ட வகையினையும் நன்கு உணரலாம.
அரச இலச்சினை
சேரர்க்கு வில்லும், சோழருக்குப் புலியும், பாண்டியருக்கு மீனும் அரசியல் இலச்சினைகளாகும். அவர்கள் கொடிகளிலும் இவையே எழுதப்பட்டிருந்தன. அரசாங்க ஒலேகளிலும் கப்பல்களில் ஏற்றப்பட்ட பொதிகள் மீதும் இந்த இலச்சினை களே பொறிக்கப்பட்டிருந்தன. இமயமலையில் சேரன் வில்லை யும், சோழன் புவியையும், பாண்டியன் கயலையும் பொறித் தனர் என்று சிலம்பு செப்புகிறது. தமிழரசர் செப்பேட்டுப் பட்டய முகப்பிலும் இந்த முத்திரைகள் காணப்படுகின்றன,
தமிழகத்தை ஆண்ட பல்லவர்க்கு கந்தி இலச்சினை இருந்தது. அவர்கள் கொடியில் நந்தி எழுதப்பட்டிருந்தது. பிற்காலச் சோழர் இலச்சினைகளில் வில், புலி, கயல் ஆகிய மூன்றும் பொறிக்கப்பட்டன. அவர்கள் சேர பாண்டியர்களே அடக்கி ஆண்டமையை இந்த இலச்சினை குறிக்கின்றது. விசய நகர வேந்தர் பன்றி இலச்சினையைப் பெற்றிருந்தனர். அவர்களது கொடியும் பன்றிக் கொடியே.