பக்கம்:தமிழக ஆட்சி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. ஆட்சிக் குழுக்களும் அலுவலரும்

பழைய காலந்தொட்டே சமுதாயம் தனி மனிதனை அரசாளவிட்டதாகத் தெரியவில்லை. ஆட்சித்துறையில் அவனுக்கு உதவிபுரிய அரசியல் மேதைகளும் சான்றோரும் நாட்டுப் பிரதிநிதிகளும் இருந்து வந்தனர் என்று கருதுவது பொருத்தமாகும். ‘கடிந்து அறிவுரை கூறும் அறிஞர் துணை அரசனுக்குக் தேவை. அப்பொழுதுதான் அவன் காவலையுடைய அரசனுவான். அத்தகைய காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர் இல்லாமலே கெட்டு விடுவான்’ என்பது வள்ளுவர் கருத்து.

“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும்.” என்பது அவர் வாக்கு.

ஐம்பெருங் குழு

சங்க காலத்தில் அரசனுக்கு உதவியாக அமைச்சர் இருந்தனர் என்று புறநானூறு புகல்கின்றது. சிலப் பதிகாரத்திலும், மணிமேகலையிலும் அரசனேடு தொடர்பு கொண்ட இரண்டு பெருங் குழுக்கள் குறிக்கப்பெற்றுள்

1. பாஅல் புளிப்பினும் பகலி ருளினும் நாஅல் வேத நெறிதி ரியினும் திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி” -

-புறநானூறு, செ. 2.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/54&oldid=573572" இலிருந்து மீள்விக்கப்பட்டது