பக்கம்:தமிழக ஆட்சி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சிக் குழுக்களும் அலுவலரும்

49



எண்பேராயம்

கரணத்தியலவர், கரும விதிகள், கனகச் சுற்றம், ! கடை காப்பாளர், நகர மாந்தர், படைத்தலைவர், யானவீரர், இவுளி மறவர் என்பவர் எண்பேராயத்தராவர்.” இவருள் (1) காணத்தியலவர் - அரசாங்கப் பெருங் கணக்கர், (2) கருமவிதிகள் - அரசாங்க வேலைகளை நடத் தும் தலைவர்கள்; (3) கனகச்சுற்றம் - அரசாங்கப் பொருட்காப்பு அதிகாரிகள், (4) கடை காப்பாளர் - நாடு காக்கும் அதிகாரிகள்; (5) நகரமாந்தர் - நாட்டில் இருந்த பல நகரங்களின் பிரதிநிதிகள்: (6) படைத்தலைவர் - காலாட்படைத் தலைவர், (7) ய்ானே வீரர் - யானப் படைத்தலைவர்: (8) இவுளி மறவர் - குதிரைப் படைத் தலைவர்.

மன்னன் ஐம்பெருங் குழுவினரையும் எண்பேராயத் தாரையும் கலந்தே ஆட்சி புரிந்தான். இப்பெருமக்கள் நற்குடிப் பிறப்பு. கல்வி, நல்லொழுக்கம், உண்மை யுடைமை, தாயவுள்ளம், நடுவுநிலைமை முதலிய தற் பண்புகள் பெற்றிருத்தல் வேண்டும் என்று மன்னர் எதிர்பார்த்தனர். நாட்டுப் பெருவிழாக்களிலும், நாட்டுப் பெருஞ் செயல்களிலும் இக்குழுவினர் பங்கு கொண்டனர்’

மதுரை நகரம் எரியுண்டபோது ஆசான் (புர்ோ கிதன்), பெருங்கணி, அறக்களத்து அந்தணர் (நீதிபதிகள்), காவிதி (அரசாங்க உயர் அலுவர்), மந்திரக் கணக்கர் (அரசாங்க ஒலே எழுதுவோர்), கோவிலதிகாரிகள் என் பவர்கள் பேச முடியாதிருந்தனர் என்று சிலம்பு செப்புகிறது.”

1. காதை 5, வரி 157 உரை . . . . 2. “ஆசான் பெருங்கணி அறக்களத் தந்தணர் காவிதி மந்திரக் கணக்கர் தம்மொடு கோயில் மாக்களும் குறுந்தொடி மகளிரும் ஓவியச் சுற்றத்து உரையவிந் திருப்ப --- - அகாதை 22, வரி8-11.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/56&oldid=573574" இலிருந்து மீள்விக்கப்பட்டது