உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக ஆட்சி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சிக் குழுக்களும் அலுவலரும்

51



‘அறைபோகு அமைச்சர்", நூலறி புலவர்’, “அருந் திறல் அமைச்சர்’ என்று சிலப்பதிகாரம் அமைச்சரைப் பற்றிக் கூறுகின்றது. சேரன் செங்குட்டுவனிடம் வில்லவன் கோதை என்ற அமைச்சன் இருந்தான் என்று அரும்பத உரை யாசிரியர் கூறியுள்ள்ளார்.”

சங்ககாலத்தில் திருவாரூரைத் தலை நகராகக் கொண்டு ஆண்டவன் என்று கருதப்படும் மது நீதிச் சோழன் தன் மகனே முறை செய்ய நினைத்தபொழுது அமைச்சர் வேறு வேறு யோசனைகளைக் கூறினர் என்று பெரியபுராணம் பேசு கிறது.”

பல்லவர் காலத்திலும் அமைச்சர் இருந்தனர்.” மகேந்திரவர்மன் ஆட்சியில் அ ைம ச் ச ர் இருந்தனர் என்று சேக்கிழார் கூறியுள்ளார். “கோமாறஞ் சடை யற்கு உத்தர மந்திரி களக்குடி வைத்தியன் மூவேந்த மங்கலன் பேரறையன் ஆகிய மாறங்காரி இக் கற்றளி செய்து நீர்த்தளியாதே சுவர்க்கரோகணஞ் செய்த பின்ளை, அவனுக்கு அனுஜன் உத்தர மந்த்ரபதம் எய்தின பாண்டிய மங்கல விசையதரையன் ஆகிய மாறன் எயினன் முக மண்டபஞ் செய்து நீர்த்தளித்தான்’ என்பது மதுரை மாவட்டத்து யானைமலைக் கல்வெட்டுச் செய்தி. கி. பி.8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டியன் மாறன் சடையன்

1. காதை 5, வரி. 130. 2. காதை 25, வரி 116. 3. காதை 26, வரி 4. 4. காதை 25, வரி 151. உரை. . 5. திரு நகரச் சிறப்பு, செ. 30, 37. • , , 6. R. கோபாலன், காஞ்சிப்பல்லவர், பக் 38. 7. திருநாவுக்கரசர் புராணம், செ.90. 8. E. I. VII p. 317.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/58&oldid=573576" இலிருந்து மீள்விக்கப்பட்டது