உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக ஆட்சி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

தமிழக ஆட்சி



ஆட்சியில் மாறன்காரி என்பவன் முதலமைச்சயிைருந்தான். அவனுக்குப்பின் அவன் தம்பியான மாறன் எயினன் என்பவன் முதலமைச்சயிைருந்தான் என்பதை இக்கல்வெட் டிலிருந்து நாம் அறியலாம். கி. பி. 9-ஆம் நூற்றண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் மாணிக்கவாசகர் பாண்டியனிடம் அமைச்சராக இருந்தார் என்பதைத் திருவிளையாடற் புராணம் தெரிவிக்கிறது.

பிற்காலச் சோழர் காலத்தில் செய்யப்பட்ட கலிங்கத்துப் பரணி அமைச்சர்களைக் குறிப்பிடுகின்றது. அவர்கள் மந்திர பாரகர் எனப்பட்டனர். கலிங்க அரசனுக்கு எங்கராயன் என்ற அமைச்சன் இருந்தான் என்று அதே பரணி கூறு கின்றது. விக்கிரம சோழனுடன் அமைச்சரும் உலா வந்த னர் என்று ஒட்டக்கூத்தர் குறித்துள்ளாார். பெரியபுராண ஆசிரியராகிய சேக்கிழார் அநாபய சோழனுக்கு முதலமைச்ச ராய் இருந்தார் எனச் சேக்கிழார் புராணம் செப்பு கிறது.”

சோழர் காலத்தில் பல்லவராயர் என்ற முதலமைச்சt சில படைகளுக்கும் தலைவராக இருந்தார்.

விசய நகர ஆட்சியிலும் அமைச்சர்கள் இருந்தனர் என்பதைக் கல்வெட்டுக்களால் அறியலாம். ஒரு நாட்டு ஆட்சியில் எத்துணை அமைச்சர் இருந்தனர் என்பதை அறியத் தெளிவான சான்றுகள் இல்லை.

நாயக்கர் காலத்தில் முதலமைச்சன் பிரதானி, தளவாய் என்ற பெயர்களைப் பெற்றிருந்தான். முதலமைச்சன் அரசனது ஆலோசனைக் குழுவில் முதலிடம் பெற்றிருந்

1. கண்ணி, 327. 2. கண்ணி 74. 2. செ. 18.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/59&oldid=573577" இலிருந்து மீள்விக்கப்பட்டது