உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக ஆட்சி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

தமிழக ஆட்சி



நிதிகளின்) ஆலோசனைக் குழுவாக அஃது இருக்கலாம்; அஃது அரசனுக்கும், அமைச்சரவை - அவர்தம் இலாக் காக்கள் ஆகியவற்றுக்கும் இடையில் இருந்து தொண் டாற்றி இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கருது: கின்றனர்.”

சேனைத் தலைவன்

சேனைத் தலைவன் ஆட்சிக் குழுவில் இடம் பெற்றிருந் தான். பிற்காலச் சோழர் படைத்தலைவன் தண்ட நாயகன் என்று அழைக்கப்பட்டான்: தண்டம் என்ற சொல் படை, நீதி, ஆட்சி புரிதல் என்ற பொருள்களே உடையது. ஆவூர் உடையார் என்பவன் ஒரு தண்ட நாயகன். அவன் ஜயங்கொண்ட சோழ மண்டலத்தை ஆண்டு வந்தான் என்று சோழர் கல்வெட்டுத் .ெ த ரி வி க் கி ன் ற து. அச்சொல் படைத் தலைவனையும் சில இடங்களில் குறிக்கின்றது.

புரோகிதன்

சங்க காலத்தில் ஆசான் (புரோகிதன்) ஐம்பெருங் குழுவில் இடம் பெற்றிருந்தான். பிற்காலத்தில் புரோ சிதன் இடம் பெற்றதாகத் தெரியவில்லை. சமயத் துறை யிலும் ஒழுக்கத் துறையிலும் புரோகிதன் ஆலோசனை கேட்கப்பட்டது போலும் பிற்காலச் சோழர் காலத்தில் புரோகிதரின் இடத்தில் இராசகுரு அமர்ந்திருந்தான். அவனது சொல்லுக்கு அரசன் மிகுந்த மதிப்பு வைத் திருந்தான் என்பது கல்வெட்டுக்களால் தெரிகின்றது. மூன்றாம் குலோத்துங்கன் ஆணையைச் சுவாமி தேவர் என்ற இராசகுரு மாற்றிவிட்டார் என்று கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. நாட்டின் சமயத்தைப் பாதுகாக்கத்

1. Dr. Mahalingam, S. I. Polity, p. 131. 2. 39 of 1921.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/61&oldid=573579" இலிருந்து மீள்விக்கப்பட்டது