உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக ஆட்சி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சிக் குழுக்களும் அலுவலரும்

55



‘தர்மாதிகாரி’ என்று ஒருவன் தஞ்சை மகாராட்டிரர் காலத் தில் இருந்தான்.”

செயலாளன்

ஆட்சிக் குழுவின் செயலாளன் உள்படு கருமத் தலைவன்’ கானப் பழங்காலத்தில் பெயர் பெற்றான்.” சோழன் காலத்தில் ‘திருவாய்க் கேள்வி’ என்று பெயர் படைத்த அலுவலன் செயலாளனாக இருந்திருக்கலாம். விஜய நகர காலத்தில் அவன் இராயசம்’ என்று பெயர் பெற்றான். தமிழகத்து மடங்களில் மடாதிபதியிடம் செயலாளராக இருப்பவர் “இராயசம்’ என்றே இன்றும் அழைக்கப் படுகின்றனர்.

அரசாங்க உயர் அலுவலர்

ஒரு நாட்டு அரசாங்கம் நடைபெறத் தெளிவான இலாக்காக்கள் இருத்தல் வேண்டும். அவற்றில் வேலை பார்க்க உயர் அலுவலர்களும் எழுத்தர்களும் இருப்பது இயல்பு. அவ்வலுவலரும் சோழர் கல்வெட்டுக்களில் கருமிகள், பெருந்தரம் அல்லது பெருந்தனம் என்றும், பணி மக்கள், சிறுதரம் அல்லது சிறுதனம் என்றும் அழைக்கப் பட்டனர். சிறுதனத்துப் பணிமக்கள், சிறு த ன த் து வலங்கை வேளைக்காரப் படைகள், பெருந்தனத்துச் சேனதிபதி யூரீ கிருஷ் என் ராமன், பெருந்தரம் திருமலை வெண்காடன், பெருந்தனத்து ஆன ஆட்கள், பெருந் தனத்து வலங்கை வேளைக்காரப் படைகள் என்பன போன்ற தொடர்கள் கல்வெட்டுக்களில் காணப்படுகின் றன. ‘தனம் என்பதும் தரம் என்பதும் ஒரே பொருளைத்

1. கே. ஆர். சுப்பிரமணியர், தஞ்சை மகாராட்டிர

- மன்னர்கள், பக். 88. 2. டாக்டர் சோமசுந்தர பாரதியார், திருவள்ளுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/62&oldid=573580" இலிருந்து மீள்விக்கப்பட்டது