உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக ஆட்சி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

தமிழக ஆட்சி



தரும் சொற்கள் ஆதலால், சேனதிபதி போன்ற உயர்தர அலுவலர் “பெருந்தரம் என்றும், அடுத்து வேலை பார்ப்ப “வர் சிறுதரம்’ என்றும் அரசாங்க முறையில் அழைக்கப் பட்டனர் என்று கொள்வதே பொ. ரு த் த மா கு ம்.. பெருந்தரத்தைச் சேர்ந்த உயர் அலுவலர் கருமிகள்’ என்றும் அழைக்கப்பட்டனர்; சிறுதரத்தைச் சேர்ந்தவர் கள் ‘பணிமக்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இவ் விருவகைக்கும் இடைப்பட்ட அலுவலர் சிறுதனத்துப் பெருந்தனம்’ என்று அழைக்கப்பட்டனர் என்று கொள் ளலாம்.’

படைத்தலைவன் போன்ற உயர் அலுவலர்க்கு குறிப் பிட்ட ஊர் அல்லது நிலம் மானியமாக வழங்கப்பட்டது. பல சந்தர்ப்பங்களில் ஒரு குறிப்பிட்ட இடத்தின் வருவாய் முழுவதும் ஒர் அதிகாரி பெறும்படி அரசன் ஆணையிட்டிருப்பான்; சில சந்தர்ப்பங்களில் அப்பகுதி யில் ஒரு பகுதி வருவாயை மட்டும் அவன் பெற்றுக் .ெ கா ள் ளு ம் படி விதித்திருப்பான். நிலம் மட்டும் அவனுக்குச் சொந்தமாயிராது. சில காலங்களில் குறிப் பிட்ட ஊரோ, பெரும் பகுதி நிலமோ உயர் அலுவலர்க்கு வழங்குவதும் உண்டு. அவர்கள் தமக்குக் கொடுக்கப் பட்ட ஊரின் அல்லது நிலத்தின் வருவாயில் ஒரு பகுதியை அரசனுக்கு வழங்க வேண்டும்; போர்க்காலத் தில் ஒரு சிறுபடையையும் அரசனுக்கு உதவ வேண்டும். நாயக்கர்கள் ஆட்சியில் பாளையக்காரர். இத்தகைய முறை யில் இருந்தனர். பேரரசர்க்கு அடங்கிய சிற்றரசராகிய அரசாங்க அலுவலரும் இம்முறையில் இருந்தனர்; இத்தகைய

1. A. R. E. 1913, 22.

ஊர் மக்களின் தலைவன் இன்றும் பெருந்தனக்காரன்”

என்று அழைக்கப்படல் இங்கு நினைக்கற்பாலது.

2. 29 of 1897.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/63&oldid=573581" இலிருந்து மீள்விக்கப்பட்டது