ஆட்சிக் குழுக்களும் அலுவலரும்
57
உரிமை பெற்றமையாற்றான் கிழார், நாடாள்வார்,’ எனப் பெயர் பெற்றனர் போலும் ஊரோ, நிலமோ தமக்கு
உரிமையாகப் பெற்றவர், தம் விருப்பம் போல் அவற்றைச்
செய்துகொள்ள உரிமை உடையவர் ஆவர்.’
அரசியலில் பணியாற்றிய உயர் அலுவலர் ஏளுதி, மாராயன்’ என்றாற் போன்ற பட்டங்களைப் பெற்றனர். இப்பட்டங்கள் போர்த் திறமையைக் குறித்தே முதலில் வழங்கப்பட்டன; பின்பு காலப் போக்கில் போரில் ஈடு :படாத உயர் அலுவலர்க்கும் வழங்கப்பட்டன. சங்ககாலத் தமிழகத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனது பெயரைத் தாங்கி அவனது அரண்மனைப் பொற்கொல்லன் இருந்தான் என்பது சிலப்பதிகாரத்திலிருந்து தெரிகிறது.” சோழர் ஆட்சியில் அரையன், பேரரையன், இராசன், அதிராசன், பிள்ளை, முதலி, நாடாள்வான் என்ற பட்டங்களை உயர் அலு வலர் தாங்கியிருந்தனர். இராசராசப் பிரம்மாதிராசன் என்றாற்போலச் சிலர் தம் காலத்திலிருந்த அரசர் பெயர் களையும் தாங்கியிருந்தனர். .
திருவாய்க் கேள்வி இவன் அரசனுடன் இருந்து அவன் கூறும் கட்டளைகளைக் கேட்டு எழுதுபவன்.
திருமந்திர ஓலை : இவன், அரசன் தன் அமைச்சரவையில் முடிவு செய்த செய்திகளே எழுதும் உயர் அலுவலன்.
1. K. A. N. சாத்திரி, சோழர், 11, பக் 241. 2. மாராயம் பெற்ற நெடுமொழி-தொல்காப்பியம்.
மாராயன்மனைவி மாராசி எனப்பட்டாள்.
3. தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற
பொன்வினைக் கொல்லன் இவன் எனப் பொருந்தி.
-சிலம்பு, காதை 16-வரி 109-110 4, S. I. Polity P. 137. -