பக்கம்:தமிழக ஆட்சி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. வரவு செலவு

வரவுக்குரிய வழிகள்

(1) நிலவரி, (2) சொத்துவரி, (3) அலுவல்வரி, (4) வணிக வரி, (5) தொழில்வரி, (6) படைக்குரிய வருமானம், (7) சமுதாய-குழுவரிகள், (8) நீதி மன்றங்களில் விதிக்கும் தண்டப்பணம், (9) காட்டு வருமானம், சுரங்க வருமானம், உப்பள வருமானம், நாதியற்ற சொத்து முதலியன.

(1) நன் செய், புன்செய் என்று பயிர் நிலங்கள் இருவகை யாகப் பிரிக்கப்பட்டு நிலவரி விதிக்கப்பட்டது. அவை மா, குழி, காணி, முக்காணி, அரைக்காணி, முந்திரிகை என்று சிற்றளவிலும், வேலி என்றுபேரளவிலும் பேசப்பட்டன. ஒரு. வேலியின் ஒர,ாழ்.ரா என்னும் சிறு பகுதியும் சோழர் காலத் தில் கணக்கிடப்பட்டது என்று தஞ்சைப் பெரிய கோவில் கல். வெட்டுத் தெரிவிக்கிறது. ஆற்றுப் பாய்ச்சலுள்ள நிலங்களில் உற்பத்தி மிகுதியாகவும் மற்ற நிலங்களில் குறைவாகவும் விளைவைப் பொறுத்து வரி விதிக்கப்பட்டது.

ஒவ்வொரு கிராமத்திலும் கோவில்கள், தொழிலாளரும் பண்ணையாட்களும் வாழுமிடங்கள், குளங்கள், மன்றம், கோவில்களைச் சேர்ந்த நந்தவனங்கள், நெல் அடிக்கும் களம், கால்நடைகள் மேயும் இடம், ஆற்றங்கரையை அடுத்த சதுப்பு நிலம், உடைப்பு உண்டான நிலங்கள், பயிரிடமுடியாத நிலம், இடுகாடு, சுடுகாடு என்பவை வரி விதிக்கப்படாத இடங்: களாகும்.

1. A. R. E, 1900,para 25,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/68&oldid=573586" இலிருந்து மீள்விக்கப்பட்டது