பக்கம்:தமிழக ஆட்சி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

தமிழக ஆட்சி



வரி விதிக்கப் பெற்ற நிலங்கள் “தரம் பெற்ற நிலங்கள்’ என்றும், வரி விதிக்கப் பெருதவை, தரமிலி நிலங்கள்’ என்றும் சோழர் காலத்தில் பெயர் பெற்றன. ஒரு வேலியின் இருபதில் ஒரு பாகம் மா எனப்படும். ஒரு மாவுக்கு இவ்வளவு என்று வரி விதிக்கப்பட்டது. நிலவரி கடமை என ஒரு காலத்தில் பெயர் பெற்றது. நாற்பது கலம் விளையும் ஒரு ‘மா நிலத்திற்கு 3 கலம் வரியாக வாங்கப்பட்டது. சில இடங் களில் மிகுதியாகவும் வாங்கப்பட்டது.

சோழர் காலத்தில் நிலங்கள் யாவும் அளக்கப்பட்டன. முதல் இராசராசன் காலத்திலும், முதல் குலோத்துங்கன் காலத்திலும், விக்கிரம சோழன் காலத்திலும், மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலும் நிலங்கள் அளக்கப்பட்டன. நிலம் அளந்த கோல்கள் 12, 14, 16, 20 அடி நீள முள்ளவை. இவையல்லாமல் கடிகைக் களத்துக் கோல், பூரீபாதக் கோல், மாளிகைக் கோல் என்று வேறு அளவுகோல் களும் இருந்தன. நிலம் அளக்க அரசாங்க இலாகா ஒன்று இருந்தது. முதல் இராசராசன் காலத்தில் அந்த இலாகாவின் தலைவன், சேனதிபதி குரவன் இராசராச மகாராசன் என் பவன். அவன் நிலம் அளந்ததால் உலகளந்தான் என்று

பெயர் பெற்றான்..! -

நிலவரி ஆறில் ஒரு பகுதி அரசாங்கம் வசூலித்தது என்பது பொதுக்கூற்று. பல இடங்களில் பல காலங்களில் .நான்கில் ஒரு பங்கும் மூன்றில் ஒரு பங்கும் இரண்டில் ஒரு பங்கும் அரசாங்கத்திற்குச் சென்று வந்தது.

1. A. R.E. 1935–36, para 43. 2, 229 of 1910, 261 of 1902, 413 of 1922, 104 of 1928 3. 160 of 1921, 87 of 1900, 99 of 1913 4. A. R. E. 1913, para 21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/69&oldid=573587" இலிருந்து மீள்விக்கப்பட்டது