பக்கம்:தமிழக ஆட்சி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரவு செலவு

63



(2) சொத்து வரி

இக்காலத்தில் ஒரு மனிதனது ஆண்டு வருவாயைக் கொண்டே, சொத்து வருவாய் விதிக்கப்படுகிறது. பழங் காலத்தில் அவனது வருவாயைப்பற்றி அரசாங்கம் கவலைப் படவில்லை; அவனது சொத்தின்மீதே வரி விதிக்கப்பட்டது. வீடுகள், மனைகள், பசுக்கள், எருதுகள், ஆடுகள், வண்டி கள், குதிரைகள், நகைகள் முதலியவற்றின்மீது வரி விதிக்கப் பட்டது.”

(3) அலுவல் வரி

ஒவ்வொருவனும் செய்து வந்த தொழிலுக்கும் அத் தொழிலுக்கு அவன் பயன்படுத்திய கருவிக்கும் வரி விதிக்கப் பட்டது. குயவன் தான் செய்த தொழிலுக்கும், பயன் படுத்திய திரிகைக்கும் வரி செலுத்தின்ை. அவ்வாறே சலவைத் தொழிலாளி தன் தொழிலுக்கும் தான் பயன் படுத்திய கல்லிற்கும் வரி செலுத்தின்ை. இவ்வாறே ஒவ்வொரு தொழிலாளியும் வரி செலுத்தினன். வண்ணன் கல்லுக்குச் செலுத்திய வரி பல்லவர் காலத்தில் பாறைக் காணம் என்றும், சோழர் காலத்தில் வண்ணுர் பாறை” என்றும், பெயர் பெற்றது. அவன் தொழிலுக்குச் செலுத்திய வரி கல்லாயம் எனப்பட்டது. கள் இறக்கியவன் தன் தொழிலுக்கும், தான் பயன் படுத்திய ஏணிக்கும் வரி செலுத்தின்ை. இந்த அலுவல் வரிகள் நாணயமாகவே செலுத்தப்பட்டன. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோரும் ஒரு தொழிலில் ஈடுபட்டிருந்தால் அவர் அனைவருமே வரி செலுத்தக் கடமைப்பட்டவர் என்பது அக்கால விதியாகும்.” தமிழகத்தில் தங்கி இருந்த பிற நாட்டாரும் வரி செலுத்

1. A. R. E. 1915, Para 44; 1917, Para 47; 1921, para

41 etc.,

2. A. R. E. 1910, Para 54.

3, 294 of 1910.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/70&oldid=573588" இலிருந்து மீள்விக்கப்பட்டது