64
தமிழக ஆட்சி
தினர். யாத்திரை செய்தவரும் வரி செலுத்தினர். பிள்ளை வரி, ஆள் வரி, பேர் கடமை என்ற வரிகளும் வழக்கில் இருந்தன.”
(4) வணிக வரி
ஓரிடத்தில் விற்பதற்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களின் மீது விதிக்கப்பட்ட வரி ஸ்தல ஆகாயம் எனப் பட்டது. ஒரு மாவட்டத்தின் வழியாக விற்பனைக்குரிய பொருள்கள் அனுப்பப்படும்போது விதிக்கப்பட்ட வரி மார்க்க ஆதாயம் எனப்பட்டது. அயல் நாடுகளுக்கு ஏற்று மதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட வரி மாமூல் ஆதாயம் எனப்பட்டது. மார்க்க ஆதாயம் என்பது மாவட்ட எல்லைகளில் அல்லது நகர எல்லைகளில் அமைக்கப் பட்டிருந்த சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்பட்ட வரிப்பன மாகும். ஒரு நகரத்திலிருந்து வேறு மாவட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பொருள்களுக்காகப் பல சுங்கச் சாவடிகளில் வரி கட்டவேண்டிய கட்டாயம் அக்காலத்தில் இருந்தது. அதனால் குடிமக்கள் மிகவும் துன்புற்றனர். அதனால் முதற் குலோத்துங்க சோழன் இச்சுங்க வரியை நீக்கினன்; “சுங்கம் தவிர்த்த குலோத்துங்கன் என்று: குடிமக்களால் பாராட்டப்பெற்றான்.”
(5) தொழில் வரி
உப்பு உண்டாக்கியதைப் பொறுத்தும், இறக்கப்பட்ட கள்ளைப் பொறுத்தும், அக்காலத்தில் வரி வசூலிக்கப்பட்டது.
தறி, செக்கு, மரக்கலம், படகு முதலிய தொழில் நிலையங்கள் மீது விதிக்கப்பட்ட வரியே தொழில்வரி எனப்பட்டது.
1. Ins of Pudukkottai state, 711, 733, 784 2, 374 of 1908