பக்கம்:தமிழக ஆட்சி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தமிழக ஆட்சி



பட்டது, அது பட்டிறை, பட்டறை, (குழு வரிகள்), சம்மாதம் (பதினெட்டுச் சாதிகள்மீது வரி) எனப் பெயர் பெற்றன.

கோவில் நடைமுறைக்கு என்று தனிவரி வசூலிக்கப்பட்டது. திருமணத்திற்கும், திருமண ஊர்வலங்களுக்கும் தனித்தனி வரிகள் வசூலிக்கப்பட்டன.

8. நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டப் பணம் “மன்றுபாடு, ‘தண்டம், முதலிய பெயர்களைப் பெற்றது, பட்டியில் அடைக்கப்படும் சண்டிக் கால்நடைகளுக்கும் தண்டம் விதிக்கப்பட்டது.” -

9. காட்டு வருமானம் முதலியனவும் அரசாங்கத்தைச் சேர்ந்தனவேயாகும்.

பலவகை வரிகள்

வரியைப் பொதுவாகக் குறிக்கும் பெயர்கள் ஆயம், இறை, கடமை என்பன. பலவகைச் சிறு வரிகள் சிற்றாயம், சில்லிறை என்ற பெயரில் வழங்கப்பட்டன. ஊர், சபை, நகரம் என்பவை விதித்த வரிகள் ஊரிடு வரிப்பாடு எனப் பட்டன. அரசாங்கத்துக்குச் செலுத்தவேண்டிய வரிகள் அனைத்திற்கும் குடிமை என்ற பொதுப்பெயர் இருந்தது.* வரி வசூலிக்கும் முறைகள்

அரசாங்கம் தான் விதித்த வரியைத் தானியமாகவும், பணமாகவும் வசூலித்தது. தானியமாக வசூலித்தல் நெல் ஆயம், நெல் முதல் எனப்பெயர் பெற்றது; பின்னது “காசாயம், ‘பொன் முதல்’ எனப்பெயர் பெற்றது; சோழர் காலத்தில் நிலவரி தானியமாகவே வாங்கப்பட்டது. அவ்வாறு வாங்கப்பட்ட தானியம் ஒவ்வொரு கிராமத்தி ஆம் இருந்த அரசாங்கக் குதிர்களில் சேர்க்கப்பட்டது.

1. 373 of 1916, 30 of 1913, 221 of 1910. 2. A. R. E. 1920, Para 79. 3. K. A. N. சாத்திரி, சோழர், பக். 522-23.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/73&oldid=573591" இலிருந்து மீள்விக்கப்பட்டது