68
தமிழக ஆட்சி
(4) சோழப் பெருநாட்டுச் சிற்றரசர்கள் தங்கள் நிலப் பகுதிகளில் வரிகளை வசூலித்தனர்; ஒரு பகுதியை நடு அரசாங் கத்துக்கு அனுப்பினர்; மற்றாெரு பகுதியைத் தங்கள் ஆட்சிக்கு வைத்துக்கொண்டனர். இத்தலைவர்கள் ஆண்டு தோறும் இவ்வாறு கப்பம் செலுத்தி வந்தனர். மதுரை நாயக்கர் ஆட்சியிலும் இவ்வாறு கப்பம் செலுத்தி வந்தனர். மதுரை நாயக்கர் ஆட்சியில் இவ்வாறே பாளையக்காரர்கள் இருந்து வந்தார்கள்.”
வரி விதிப்புத் துறை
அரசாங்க வரவையும் செலவையும் கவனிக்கப்பொருள் துறை (இலாகா) ஒன்று தனியே இயங்கி வந்தது. சங்க காலத்தில் அந்த இலாகாவில் காவிதிகள் (வரியிலார்) என்பவர் உயர் அலுவலராக இருந்தனர் என்று சிலப்பதிகாரம் செப்பு. கிறது. காவிதி என்பவன் பொருள் அமைச்சன். அவனுக்குக் கீழ் ஆயக் கணக்கர் என்பவர் வேலை பார்த்தனர். ஆயம்வருவாய். பிற்காலச் சோழர் காலத்தில் புரவு வரித்திணைக் களம் என்பது இந்த இலாகாவே ஆகும்.”
சில நிலங்களுக்கு உரிய வரியை ஒரே தொகையாகச் செலுத்திவிடின், அந்நிலங்களுக்கு ஆண்டு தோறும் வரிவிதிப் பதில்லை. எனவே, அவை இறையிலி என ப் ப டு ம். கோவிலுக்கோ, மடத்திற்கோ, வேறு தானம் செய்வதற்கோ நிலங்களை வாங்குவோர் அந்நிலங்களுக்குரிய தொகையையும் வரியையும் ஒரே முறையில் செலுத்தி விடுவது வழக்கம். அந்த
1. டிெ பக். 177 - 180,
2. சிலப். காதை 22 - வரி 9; காதை 28 - வரி 205.
காவிதி - வரியிலார் என்பர் அரும்பதவுரை யாசிரியர். ஆயம்-வருவாய்-குறள் 933.
3. s. 1.polity, p. 181.