உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக ஆட்சி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1. ஆராய்ச்சிக்குரிய மூலங்கள்

தமிழகத்தை ஆண்டவர்கள்

மிகப் பழைய காலம் முதல் ஏறத்தாழக் கி. பி. 300 வரையில் தமிழகம் தமிழ் வேந்தராலேயே ஆளப்பட்டு வந்தது. கி. பி. 300 முதல் 900 வரையில் தமிழகத்தின் பெரும்பகுதி பல்லவர் என்ற அயல் அரச மரபினரால் ஆளப்பட்டது. அக்காலத்திற்றன் நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றிச் சைவ வைணவங்களை வளர்த்தனர். ஏறத்தாழக் கி. பி. 900 முதல் 1200 வரையில் சோழப் பேரரசர் தென்னிந்தியா முழுவதையும் ஒரு குடைக்கீழ் வைத்து ஆண்டனர்.

கி. பி. 13-ஆம் நூற்றாண்டில் பாண்டியர் பேரரசு செலுத்தினர். 14-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாலிக்-காபூர் படையெடுப்பு நிகழ்ந்தது. அதே நூற்றாண் பிற்பகுதியில் விசய நகர அரசு தோன்றியது. அது தன் பிரதிநிதிகளை அனுப்பித் தமிழகத்தை ஆளச் செய்தது. பின்பு கி. பி. 1529 முத்ல் 1736 வரையில் விசய நகரப் பேரரசின் பிரதிநிதிகளாக இருந்து விசுவநாத நாயக்கர் முதலிய நாயக்க மன்னர்கள் தமிழகத்தின் பெரும் பகுதியை ஆண்டு வந்தனர். இங்ஙனமே விசயநகரப் பேரரசர் சார்பில் சோழநாட்டின் பெரும்பகுதியைத் தஞ்சை-நாயக்க மன்னர்கள் ஏறத்தாழக் கி. பி. 1530 முதல் 1675 வரையில் ஆண்டு வந்தனர். தஞ்சை நாயக்க மன்னர் ஆண்ட நிலப்பகுதி ஏறத்தாழக் கி. பி. 1675-இல் மகாராட்டிரர் ஆட்சிக்கு உட்பட்டது. மகாராட்டிரர் ஆட்சி ஏறத்தாழக் கி. பி. 18-ஆம் நூற்றாண்டு முடிய இருந்தது. ஏறத்தாழக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/8&oldid=504591" இலிருந்து மீள்விக்கப்பட்டது