வரவு செலவு
73
சில பகுதிகளில் வலங்கை, இடங்கைச் சாதிகள் மீது மிகுதி யாக விதிக்கப்பட்டிருந்த இனவரி, இடங்கைவரி என்ப வற்றைச் செலுத்த இயலாமல் வேறு இடங்களுக்குச் சென்று விட்டனர். இதனையறிந்த அரசன் அப்பகுதியை ஆண்ட தலைவனிடம் அவ்வரிகளே நீக்கும்படி ஆணையிட்டான். இவ் வாறு சில சமயங்களில் சில நிகழ்ச்சிகள் நடைபெற்றன.” அரசாங்கச் சலுகை
ஆற்று வெள்ளத்தால் நிலங்கள் விளைச்சல் தன்மையை இழந்துவிட்டால், அரசாங்கம் வேண்டிய உதவி செய்வது வழக்கம்; மீண்டும் பயிரிடத் தொடங்கிய முதலாண்டில் பாதிவரியைத்தான் வசூலிக்கும்; அடுத்த ஆண்டு முக்கால் பகுதி வரியை வசூலிக்கும்; பணமாகச் செலுத்தும் குடிமை, காணிக்கை வரிகளை நீக்கிவிடும்; பழைய வரியில் பாதியும், புதுவரியும் வசூலிக்கும்; முதலாண்டில் குடியிருப்பவர்க்கும் கடமை, அரசுப்பேறு, வாசல்பணம், ஆயம், புல்வரி முதலிய வரிகளில் பாதி அளவே முதலாண்டில் வசூலிக்கும்; அடுத்த ஆண்டு முக்கால் வரியை வசூலிக்கும். இவ்வாறே கிராமங் களுக்கும் கோவில்களுக்கும் உரிய நிலங்கள் மீது வரி வசூலிக் கப்படும். ஒரு கிராமம் கொள்ளை, படையெடுப்பு இவற்றால் துன்பப்பட்டாலும் இதே முறையில் குறைந்த வரி வசூலிக்கப் படும்.” r -
பயிரிடப்படாத இடங்களில் குடியேறிப் பயிரிடுமாறு அரசாங்கம் மக்களைத் தாண்டுவதுமுண்டு. இங்ஙனம் பயிரிடப் பண்படுத்தப்படும் நிலத்திற்குக் குறித்த காலம்வரை அரசாங்கம் வரி விதிக்காது. அரசாங்கச் செலவு
பெருநாட்டிலிருந்த சிற்றரசர்கள் தத்தம் நாட்டுக் காவற்படைக்கும் போர்ப்படைக்கும் தாங்களே செலவழித்
1. 476 of 1921. 2, 422 of 1912, 629 of 1923.