74
தமிழக ஆட்சி
துக்கொண்டனர். நடு அரசாங்க அதிகாரிகளுக்கு அவர்தம்
அலுவலுக்காக மானியங்கள் விடப்பட்டன. ஆட்சிக்குட் பட்ட் ஒவ்வொரு நாட்டிலும் (மாகாணத்திலும்) காடுகாவல் (போலீஸ்) படையினர் அந்தந்த நாட்டு வரு வாயில் பணியாற்றி வந்தனர். ஒவ்வோர் ஊரிலும் ஊராட்சி மன்றம் இருந்து வழக்குகளைத் தீர்த்து வந்தமையால், நடு. அரசாங்கத்திற்கு அதற்கென்று தனிச் செலவு ஏற்படவில்லே.
இக்காலத்தைப்போலப் பல வகைத் துறைகளிலும் அக்கால
அரசாங்கம் பொருள் செலவிடத் தேவையில்லை.
(1) ஆயினும் அக்கால அரசர்கள் ஒருவரோடொரு. வர் ஓயாது போரிட்டு வந்தனர் என்பதை வரலாறு உணர்த்துகிறது. ஆதலால் நடு அரசாங்கம் தனது வருவாயின் பெரும் பகுதியைப் படைப் பெருக்கத்திற். காகச் செலவிட்டு வந்தது. சோழப் பெருநாட்டில் சோழப் பேரரசர் பல இடங்களிலும் 74 படைகளை வைத்திருந்: தனர். எனின், அப்படைகளுக்குப் பெரும்பொருள் செலவாகி யிருக்க வேண்டும் அல்லவா?
(2) அறக்கூழ்ச்சாலை, வேறு பல தானங்கள் இவற். றிற்காக ஒரு பகுதி வருவாய் செலவிடப்பட்டது. கோவில் கட்டுதல், பூசை விழாக்கள் செய்தல், மடங்கள், பள்ளிகள், மருத்துவ மனைகள் இவற்றை நடத்த உதவுதல், என்பவற். றிற்கும் அரசாங்க வருவாயின் ஒரு பகுதி செலவிடப் பட்டது.
(3) பண்டைத் தமிழரசர் நல்லிசைப் புலவர்களுக்கும், பாணர்க்கும், கூத்தர்க்கும் .ெ பா ரு ளு த வி செய்தனர். உருத்திரன் கண்ணளுர் என்ற புலவர், சங்ககாலக் கரிகால் வளவன்மீது பட்டினப்பாலே பாடிப் பதியிைரம் பொன் பரிசு பெற்றார். இரண்டாம் இராசராசன் தன்மீது உலாப் பாடிய ஒட்டக்கூத்தர்க்கு - ஒரு கண்ணிக்கு ஆயிரம்
1. கலிங்கத்துப்பரணி, இராசபாரம்பரியம், கண்ணி 21: