பக்கம்:தமிழக ஆட்சி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

தமிழக ஆட்சி



நும் நாட்டில் உள்ள பசுக்களும், குற்றமற்ற பார்ப்பனரும், பெண்டிரும், நோயுடையவரும், பிள்ளை பெருதவரும் எமது அம்புகளுக்கு இலக்காகாமல் தப்பித்துக் கொள் ளுங்கள்,’ என்று கூறுவது மரபு. இத்தகைய போர்ச் சட்டம் அக்காலத்தில் இருந்து வந்தது. இது அறநெறி என்று கருதப்பட்டது.”

சமுதாயத்துக்குரிய சட்ட திட்டங்களைக் கொண்ட நூல்கள் அறநூல்கள் (தரும சாத்திரங்கள்) என்று பெயர் பெற்றன. அவை வடமொழியில் வடநாட்டு மக்களுக்கு எழுதப்பட்டனவே தவிரத் தமிழ் மக்களுக்கு அல்ல. ஆயினும், சங்க காலத்திற்குப் பின்னர்த் தமிழர் அல்லாத பல்லவர் தமிழகத்தை ஆளத் தொடங்கியது முதல், வடவர்க் காக எழுதப்பட்ட தருமசாத்திரங்களின்படி தமிழகத்தை ஆளத் தொடங்கினர். வடநாட்டில் முதலில் தரும சாத்தி ரங்களின்படியே சட்ட திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன. அந்நூல்களுக்கு உரையாசிரியர்கள் தோன்றி விளக்கங்கள் எழுதத் தொடங்கிய பிறகு, அவ்வுரையாசிரியர்கள் பல்வேறு இனமக்களின் நீண்ட கால வழக்காறுகளையும் ஒப்புக்கொண் டனர்.”

அரச குடும்பத்தினரைக் கொலை செய்தல், அரசன் உதவிய அறங்களைச் சிதைத்தல், அரசன் விதித்த தண்டத் தைச் செலுத்தாமை, கோவிலுக்கென்று அரசன் ஆணையிட்ட பணத்தைச் செலுத்தாமை, சமுதாய அமைதியைக் கெடுத்தல் போன்றவை அரசத் துரோகச் செயல்கள் என்று கருதப்பட்டன. இவ்வாறே கிராமத் துரோகம், காட்டுத் துரோகம் என்றும், இத்தகைய தவறுகள் இடத்துக்கு ஏற்பப் பெயர் பெற்றன. ஊரவைகள், கிராமத் துரோகத்துக்குத் தண்டனை விதித்தன. அவ்வாறே நாடாள்வார் நாட்டுத் துரோகிகளைத் தண்டித்தனர்.

1. டிெ, செ. 9

2. S. I. Polity. p. 198

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/85&oldid=573603" இலிருந்து மீள்விக்கப்பட்டது