சட்டம்-முறை-காவல்
81
சமன்செய்து சீர்துக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.".
என்பதும் அப்பெருமான் வாக்காகும்.
சோழநாட்டுத் தலைநகரான உறையூர் நீதிமன்றத்திற்குப் பெயர்போனது என்று சங்கப்பாடல் குறிக்கின்றது. பண் டைக்காலத்தில் அரண்மனை வாசலில் ஆராய்ச்சிமணி கட்டப் பட்டிருந்தது. நீதி வேண்டுவோர் அம்மணியை அசைத்து ஒசை உண்டாக்குவர். உடனே மன்னன் அவர்களைத் தன் கொலுமண்டபத்திற்கு அழைத்து வரச்செய்து அவர்தம் குறைகளைக் கேட்பான்; ஏற்றமுறையில் நீதி வழங்குவான். மனுநீதிச்சோழன் வரலாறே பண்டைத் தமிழரசர்தம் நீதி முறைக்கு ஏற்ற சான்றாகும்.”
கண்ணகியின் வழக்கைப் பாண்டியன் நெடுஞ்செழியன், தன் அரண்மனையில் மாதவியோடு தனித்திருந்தபோது, மிகவும் பொறுமையாகக் கேட்டான் என்பதிலிருந்து, அவசர காலங்களில் அரசன் எந்த இடத்திலிருந்தும் வழக்குகளே விசாரிப்பது வழக்கம் என்பது தெரிகிறது, இளைஞனுக இருக்கும் தான் முறை தவருது நீதி வழங்குவானே என்று ஐயுற்ற இருவர்க்கு, முதிய நீதிபதி வேடத்தில் தோன்றிக் கரிகாலன் முறை வழங்கினன் என்று பழம் பாடல் கூறுகின்றது.”
1. அதிகாரம் 12, 8.
2. ‘மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து
அறநின்று நிலையிற் ருகலின் அதனல் முறைமைநின் புகழும் அன்றே.” -
-புறநானூறு, செ, 39.
3. பெரியபுராணம், திருநகரச் சிறப்பு, செ. 27 - 44.
4. பழமொழி, செ. 6,
6