பக்கம்:தமிழக ஆட்சி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

தமிழக ஆட்சி



சங்ககால நீதிமன்றம் மன்றம், அவை, அவைக்களம், அறக் க்ளம் எனப்பட்டது. நீதிபதிகள் அறக்களத்து அந்தணர் எனப் பட்டனர் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது.”

பல்லவர் காலத்தில் உயர்நீதி மன்றம் தர்மாசனம் எனப் பெயர் பெற்றது. கிராமங்களில் ஊர் அவைகள் இருந்தன. ஊர் அவையாரே ஊர் வழக்குகளைத் தீர்த்தனர்; உரிய தண்டனைகளை விதித்தனர். யானும் என் மரபினரும் இவருக்கு அடிமை என்று சுந்தரர் பாட்டர்ை எழுதிக் கொடுத்திருப்பதால், சுந்தரர் தமக்கு அடிமை என்று வாதிட்ட கிழவேதியர் வழக்கைத் திருவெண்ணெய் நல்லூர்ச் சபையினரே நடுவு நிலையிலிருந்து எல்லாவற் றை யு ம் விசாரித்துத் தீர்த்தனர். இவ்வாறே சிறுவரான விசார சருமர் செய்த தவற்றுக்கு அவர் தந்தை விசாரிக்கப்பட்டான், அவன் அவையோரிடம் மன்னிப்பு வேண்டினன் என்று பெரிய புராணம் பேசுகின்றது.” -

சோழர் ஆட்சியில் இத்தகைய ஊர் அவைகளும் சபை களும் நாடுகளும் (நாட்டு மன்றங்களும்) வழக்குகளே விசாரித்து நல்ல முறையில் முடிவு வழங்கின என்பதைப் பல கல்வெட்டுக்களால் அறிகிருேம்.

விசயநகர ஆட்சிக் காலத்தில் பிரதானி (முதலமைச்சன்) நீதிமன்ற உயர் அதிகாரியாக இருந்தான். சில சமயங்களில் அரசனும் பிரதானியும் அமர்ந்து வழக்கைத் தீர்ப்பதுண்டு. மதுரை வீரப்ப நாயக்கர் ஆட்சியில் ஒவ்வொரு கிராமத்திலும் நீதிபதிகள் இருவர் இருந்தனர். அவர்கள் ஊர் மக்களால் மிகவும் மதிக்கப்பட்டனர்.” -

1. காதை 22, வரி 8.

2. தடுத்தாட்கொண்ட புராணம், செ.469:சண்டேசுவரர் - புராணம், செ. 40-43

3. மதுரை நாயக்கர், பக்.241

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/89&oldid=573607" இலிருந்து மீள்விக்கப்பட்டது