பக்கம்:தமிழக ஆட்சி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

தமிழக ஆட்சி



கி. பி. 1464 முதல் 1660 வரையில் செஞ்சியில் நாயக்கர் ஆட்சி . இருந்தது.

ஆராய்ச்சிக்குரிய மூலங்கள்

தமிழ் நாட்டு வரலாற்றை அறிவதற்கு உதவும் சான்ற களுள், (1) தமிழ் இலக்கண இலக்கியம், (2) சமகால இலக்கியம், (3) அயல்நாட்டார் தமிழகத்தைப் பற்றி எழுதியுள்ள குறிப்புக்கள், (4) கல்வெட்டுக்கள், (5) கட்டடம் முதலியன, (6) வழக்கில் உள்ள வரலாற்றுச் சான்றுகள் என்பன குறிப்பிடத் தக்கவையாகும்.

(1) இலக்கண இலக்கியம்

மேலே கூறப்பெற்ற வரலாற்று மூலங்களுள் தமிழகத்தைப் பொறுத்த வரையில் காலத்தால் முற்பட்டது இலக்கண இலக்கியமாகும். இன்றுள்ள தமிழ் நூல்களுள் காலத்தால் முற்பட்டது தொல்காப்பியம் என்னும் பேரிலக்கண நூல் என்பது பலர் கருத்து. அஃது இற்றைக்கு ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு முன் செய்யப் பெற்றது என்னலாம். அஃது எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்னும் மூன்று பெரும் பிரிவுகளை உடையது. அவற்றுள் பொருளதிகாரம் என்பது அக்காலத் தமிழ் மக்களுடைய அக வாழ்வையும் புறவாழ்வையும் சித்தரித்துக் கூறுவதாகும். தமிழக ஆட்சிபற்றிய செய்திகளை-அரசன் முடி புனைதல், அவனுக்குரிய கடமைகள். அவனுக்குரிய சின்னங்கள், சிற்றரசர்க்குரிய சின்னங்கள், போர் முறைகள், ஒவ்வொரு போர் முறைபற்றிய விவரங்கள், அரசு துறத்தல் என்றாற் போன்ற பல விவரங்களைப் பொருளதிகாரத்திற் காணலாம்.

இப்பேரிலக்கணத்தை இயற்றிய ஆசிரியர் தொல்காப்பியர், தமக்கு முன்னும் தம் காலத்திலும் தமிழில் இலக்கண நூல்கள் பல இருந்தன என்றும், இலக்கிய நூல்கள் பல இருந்தன என்றும் தொல்காப்பியத்தில் குறித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/9&oldid=504533" இலிருந்து மீள்விக்கப்பட்டது