பக்கம்:தமிழக ஆட்சி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சட்டம்-முறை-காவல்

83



ஒரு நாட்டைச் சேர்ந்த ஒவ்வொரு மாகாணத்திலும் மாகாண ஆளுநர் (கவர்னர்) அல்லது அரசப் பிரதிநிதி மாகாண நீதிமன்றத்தில் தலைமை தாங்கி முறை செய்து வந்தனர். ஊராட்சி மன்றத்தார், கோவில் அதிகாரிகள், சங்கத்தார், சாதித் தலைவர்கள் என்பவர் ஊர் வழக்குகளைத் தீர்த்தனர். இத்தகைய ஊர் மன்றங்கள் முடிவு செய்யும் வழக்குகளில் சில, அரசனேத் தலைவனாகக் கொண்ட உயர்நீதி மன்றத்திற்குச் செல்வதும் உண்டு.

நீதி நடைமுறை

திருநாவுக்கரசர் சமணத்தைக் கண்டித்துப் பிரசாரம் செய்த காரணத்தால் அவரை விசாரித் துத் தண்டிக்க விரும் பிய பல்லவ மகேந்திரவர்மன் அமைச்சரையும் படையையும் அனுப்பித் திருநாவுக்கரசைச் சிறை செய்தான். செல்வாக் குள்ள பெரியவரைப் பெரிய அதிகாரிகள் சென்று மரியாதை யுடன் சிறை செய்தல் இன்றும் காணலாம்.

திருநாவுக்கரசர் சிவலிங்கத்தைத் தரிசிக்கவிடாமற் பழை யாறையில் சமணர் செய்த குழ்ச்சியை அரசன் அறிந்து விசாரித்துச் சமணரைத் தண்டித்தான்: தண்டியடிகளைப் பழித்துப் பேசிய சமணர்க்கும் தண்டியடிகட்கும் உண்டான விவாதத்தை விசாரித்து, நேரில் உண்மை உணர்ந்து நீதி வழங்கினன். சமயத்தைப் பாதுகாப்பது மன்னர் கடமை என் பதை அக்கால அரசரும் உணர்ந்திருந்தனர் என்பது இவற்றால் அறியலாம். . . . . - சுந்தரருடைய தந்தைக்குத் தந்தையார் வெண்ணெய் நல்லூர்ப் பித்தர்ைக்குத் தாமும் தம் வழியினரும் அடிமை

1. S. I. polity, P. 208 2. திருநாவுக்கரசர் புராணம், செ. 90 - 91.

3. திருநாவுக்கரசர் புராணம், செ.297-298. 4. தண்டியடிகள் புராணம், செ. 15–20.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/90&oldid=573608" இலிருந்து மீள்விக்கப்பட்டது