பக்கம்:தமிழக ஆட்சி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

தமிழக ஆட்சி



நிலங்களைப் பற்றிய சில வழக்குகளில், நீதிபதிகள் நிலங்களைப் பார்த்த பிறகே முடிவுகூறுவது வழக்கம். அவரவர்க்குரிய பத்திரங்களையும் நிலங்களையும் பரி சோதித்த பிறகே வழக்கு ஒன்று தீர்க்கப்பட்டது. மதுரை நாயக்கர் காலத்தில் பூரீவில்லிபுத்துாரில் (பதினரும் நூற்றாண்டில்) இத்தகைய வழக்கு ஒன்று தீர்க்கப் பட்டது.” -

சில வழக்குகளில் போதுமான சான்றுகள் இருப்ப தில்லை. வழக்காளிகள் இருவருமே ஒருவரையொருவர் குறை கூறுவர். அந்த நிலையில் நீதிபதிகள் தாம் ஐயப் படுபவரைச் சில சோதனைகளுக்கு உள்ளாக்குவர். காய்ச்சிய இரும்பைக் கையில் பிடித்தல், தீ மிதித்தல், கொதிக் கும் நெய்யில் கையை விடுதல் முதலியன அக்காலச் சோதனைகளாகும். இச்சோதனைகளுக்குட்பட்ட வ ழ க் காளிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அச்சோதனை யால் துன்புரு:திருந்தால், அவர்கள் வழக்கில் வென்ற வர்களாவர் : துன்புற்றால் வழக்கில் தோற்றவராகக் கரு தப்படுவர். ஒரு வழக்கின் முடிவு, வழக்காடிய இருவருள் ஒருவருக்குத் திருப்தி இல்லை என்றால், அவர் வென்றவரைச் சோதனைக்கு உள்ளாக்கும்படி அதிகாரிகளே வேண்டிக் கொள்ளலாம். கி. பி. 17-ஆம் நூற்றாண்டில் இத்தகைய வழக்கு ஒன்று நடந்தது என்று கல்வெட்டுக் கூறுகின்றது.”

குற்ற வழக்குகள்

கொலை, களவு, சோரம், மாற்றுக் கையெழுத்திடுதல் முதலியவை குற்ற வழக்குகளைச் (Criminal) சேர்ந்தவை. இ க்கு ற் ற ங் க ளே ச் செய்தவர் அரசாங்க வேலைக்குத் தகுதியற்றவர் என்பது தீ ர் மா னி க் க ப் பட் ட து.*

J. 582 of 1926, . - 2. S. I. Polity, pp. 223-224. 3. A. R. E. 1899, para 63.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/95&oldid=573613" இலிருந்து மீள்விக்கப்பட்டது