பக்கம்:தமிழக ஆட்சி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

தமிழக ஆட்சி



கொல்லப்பட்டனர்; அவர்கள் நிலங்கள் ஏலம் விடப் பட்டன.” - ... “

சில சமயங்களில் குற்றவாளி கடவுள் சிலைக்கு முன் உறுதி மொழி வாங்கப்படுவான் தான் குற்றம் செய்யவில்லை என்று கடவுள் விக்கிரகத்துக்கு முன் சத்தியம் செய்வான்: நெருப்பில் காய்ந்த இரும்புத் துண்டை நாவால் நக்குவான். நாவில் காயம் ஏற்படாவிடின், அவன் குற்றமற்றவகைக் கருதப்படுவான்; குற்றவாளி சில சமயங்களில் தெய்வச் சிலைக்கு முன் சத்தியம் செய்துவிட்டு, நெருப்பில் காய்ந்து கொண்டிருக்கும் இரும்பை எடுப்பதுமுண்டு. காயம் பட்டால் குற்றத்துக்கு உரிய தண்டம் விதிக்கப்படுவான்: சிலைக்குமுன் ஒரு பாத்திரத்தில் காச்சிய நெய் இருக்கும். தான் குற்றம் செய்யவில்லை என்று சத்தியம் செய்தவன், இரண்டு விரல்களை நெய்யுள் விடுவான். உடனே அவ்விரல் கள் ஒரு துணியால் சுற்றப்பட்டு முத்திரை வைக்கப்படும். மூன்றாம் நாள் அக்கட்டு நீக்கப்படும். விரல்களில் காயம் இருந்தால் அவன் கடுமையாக தண்டிக்கப்படுவான். இம் மூன்று சோதனைகளும் கி. பி. 13- ஆம் நூற்றாண்டில் விசய

நகர ஆட்சியில் வழக்கில் இருந்தன.”

குடுமியான் மலைக் கோவில் கருவறையிலிருந்து விலை யுயர்ந்த நகை களவாடப்பட்டது. ஐயுறப்பட்ட சிவபிராம -ணரைப் பக்கத்துச் சிற்றரசர்கள் - பேரூர்கள் - நாடுகள் இவற்றைச் சேர்ந்த தலைவர்கள் கூடி விசாரித்தனர்; பெரிய பட்டர்களையும் கலந்து யோசித்தனர். அம்மண்டலத் தலைவன் முன்னிலையில் இவ்விசாரணை நடைபெற்றது. குற்றவாளிகள் காய்ச்சிய இரும்பைப் பிடிக்கும்படி கட்டளையிடப்பட் .டனர். நால்வர் கைகளில் காயம் பட்டது. மற்றாெரு குற்ற வாளி தன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். குற்றவாளிகள்

1, 112 of 1911; 246 of 1917, 506 of 1918, 279 of 1927 2. S. I. Polity, p. 233. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/99&oldid=573617" இலிருந்து மீள்விக்கப்பட்டது