பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

1. வேளிர் வேளிர் என்பார் வடநாட்டிலிருந்து அகத்தியருடன் தமிழகம் வந்த பதினெட்டு குடிமக்கள் எனச் சங்க நூல்கள் கூறும். இவர் தமிழ் நாட்டிலேயே சேர, சோழ, பாண்டிய ருடன் படைப்புக்காலந் தொட்டு வாழ்ந்த குறுநில வேந்தர் என்பாரும் உண்டு. நச்சினார்க்கினியர் தொல் காப்பியப் பாயிர உரையில் "அகத்தியர் தென்திசை செல்லும் பொழுது துவாரகையிலிருந்த நெடுமுடி. அண்ணல் வழி அரசர் பதினெண்மரையும், பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும், அருவாளரையும் கொண்டுவந்து காடு கெடுத்து நாடாக்கி" வேளிரை வடநாட்டிலிருந்து தென்னாடு குடியேறியவராகக் கூறுவர். இக்கதை எவ்வாறாயினும், கபிலர் புறப்பாட்டு 205ல் வேளிருள் ஒருவனை 'வடபால் முனிவன் தடவிறுள் தோன்றிச் செம்பு புனைந்து இயற்றிய சேணெடும்புரிசை துவரா ஈகைத் துவரை ஆண்டு.... நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே!.. புலிகடிமால்!'-என அழைக்கிறார் . இதனால் வடபால் தடவினின் தோன்றி வடபால் துவரை ஆண்டு பின் தென்னாடு புகுந்தனர் என்பது தெளியலாம். தமிழ் வேளிருள் முன்னோர் திருமால் வழிவந்தவர் என்றும், அவர்கள் வாழ்ந்த ஊர் துவாரகை என்றும், அகத்தியருடன் தென்னாடு வந்து புலிக்கொடியுடைய சோழனை வென்ற வேளிர் வேந்தன் (புலிகடிமால்!) புருவன் என்றும் பெறப்படுகிறது. இதில் குறிப்பிடப்பட்ட துவாரகை எது? என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். இவர்களுடன் கோசர் என்ற பிறிதொரு