பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16 தமிழகக் குறுநில வேந்தர் தியருடைய மகன் ஹரீதியின் சுளுக்கத்திலுண்டாயின 'ரெனவுங் கூறுதலுண்டு. புலஸ்தீயருடைய தவச்சாலையும் ஸிந்து என்னும் யாறும் காச்மீரத்துச் சாரதாவனத் திருப் பதுமேலே விளக்கப்படும். இவர் கருத்துப்படி அயோத்தி இவ்வரசர்க்குத் தலைமையூராகக் கொள்ளப்படாமை மேல் சந்திரலேகை ஸ்வயம்வரத்து 'அவள் இராமபிரான் வழியினனாகிய அயோத்தியாதிபதியையும், சேதிவேந்தன் முதலிய பிறரையுந் தள்ளிச் சாளுக்கியன் முகத்திலே கண் வைத்தனள்" என்று கூறியவாற்றான் நன்கறியலாம் (விக்ரமாங்கதேவசரிதம்). சாளுக்கியன் அயோத்தியாண்ட அரசன் வழியினன் என்பது உண்மை வரலாறாயின் அயோத்தியரசனையிழித்து இங்ஙனமோர் பெருங்கவி கூறானென்க. அயோத்தி என்ற பெயருடையவூர் பழங் காலத்து நாவலந்தீவின்மேற்றிசைக் கோடியினும் உண்மை (Buddhist India) கேட்கப்படுதலும் இங்கு நினைத்துக் கொள்க. தமிழ் நூலார் சாளுக்கியரை வேள்புல வேந்தர் என்பதும், வடநூலார் அவரை அயோத்தியர் என்பதும் ஆகிய இரண்டனுள் யாது அவர் வரலாற்றொடு பொருந் துவதென்பதே ஈண்டு ஆராயத்தக்கதாம். வடநாட்டுக் கிடைத்த இவ்வரசர் பழைய சாசனங்களில், இவரை அயோத்தியாண்டவராகக் கூறாமை நினைந்து கொள்க. இக்குலத்து ஸ்ரீநாகவர்த்தனன் முதலான பல வேந்தர் சாசனங்கள் கண்டு தெளிக. பில்ஹணருக்கு முந்திய இச் சரசனங்களெல்லாம் 'கேழல் வேள்புலவரசர் கொடியே (திவாகரம்) என்ற தமிழ் நூல் வரலாற்றிற்கியைய முதற் கண விஷ்ணுவினுடய வராஹாவதாரத்தைப் புகழ்ந்து வாழ்த்திக் குலமுறை கூறுவதல்லது வேறு அயோத்தி யாண்டரென்று கூறாமை நோக்கிக் கொள்க. Indian Antiquary, vol IX, பக்கம் 124-135 பார்க்க). அயோத்தியின் தலைமை நோக்கி ஆண்டும் இவர் அர செய்தி வாழ்ந்தவரென்று புலவர் ஒருவர் புகழ்ச்சியாகத் தொடங்க அதனையே பின்னுளாரும் வரையத் தலைப்