பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ரா. இராகவய்யங்கார் 3 3 யாம். இவற்றால் வேளிர் ஸதீபுத்ரர் எனவும் வேள் என வும் பெயர் சிறந்து விளங்கிய காரணம் நன்குணரலாம். பார்வதி புத்ரர் ஸதீயபுத்ரர் என்ற உண்மையானன்றே பிற்காலத்து இக்குலத்தவர் பிள்ளையெனப் பட்டம் புனை கின்றனரென்று உய்த்துணரலாகும். பார்வதியம்மை திருமுலைப்பாலுண்ட அந்தணக் குழவியை உடைய பிள்ளை" எனச் சேக்கிழார் வணங்குதலுங் காணலாம். இக்குலம் ஸதீஸரஸிற்றோற்றஞ் செய்ததையும் “நாடே பார்வதியாம்" என்று தரங்கினி (1.72) கூறிய வரலாற் றையும், இந்நெடுங்கால தூரத்தும் மறவாமல் வேள், பிள்ளை என்றும் பெயர்கள் தங்கட் பொதிந்து கொண்டு நுணுகி நோக்குவாருள்ளத்து உண்மை வெளிப்படுத்தி மகிழ் விளைத்து விளங்குதல் காண்க. திருக்கோவிலூர் அருகே சதீய புத்ரர் எனப்பெயர் பொதிந்த பிராமி எழுத் துக்கள் அண்மையில் கிடைக்கப்பெற்றன. இனி வேள்புல வேந்தரும் சலௌகன் வழியினரும் ஆகிய சளுக்கியர் தம் சாசனங்களில், தம்மை ஸத்யாச்ரய குலதிலகன் என்று கூறிக் கொள்ளுதல் காணலாம். (Epi. Ind, vol. 3-1) ஸதியாச்ரயன் என்பதற்கு ஸதி யத்தை ஆச்ரயித்தவன் என்றும் ஸதீயை ஆச்ர யித்தவன். என்றும் பொருள் கொள்ளலாம். இவ்விரண்டனுள் ஸதியை ஆச்ரயித்தவன் என்பதே இச் சளுக்கியரை வேள்புலத்தவரென நிகண்டுகளுஞ் சாசனங் களுங் கூறும் வரலாற்றிற் கியைதல் நன்கு கண்டுகொள்க. தென்னாட்டுத் தமிழ் மூவேந்தருடன் ஸதீயபுத்ரர் உள்ளன ரென்று அசோக சாசனங் கூறுதற்கும் (Asokas Edicts 2) பொருந்த நோக்கின் ஸதீயை ஆச்ரயித்தவர் என்பதே தக்கதாதல் காண்க. ஸதீய புத்ரர்-ஸதீயினுடைய புதல் வர். இஃதின்னுமொரு வழியாலுந் தெளியலாம். தரங்கினி யில், இலங்கை வென்று மீளும் போது தமிழ் நாட்டுச் சோழனை ஓட்டியவனாகக் கூறப்பட்ட மீஹிரகுலன் கி.மு. 707) என்னுங் கச்மீர வேந்தன் சந்த்ர குல்யா