பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

34 தமிழகக் குறுநில வேந்தர் என்னும் நதி வெள்ளத்தை வேறு வழியாகச் செல்லவிடும் போது ஓர் பாறை பெருந்தடை செய்ததென்றும், பலர் பல தரம் முயன்றும் அது பெயர்க்கப்படாமையால் வருந்தி விரதம் புகுந்த அவ்வரசன் கனவில் தேவர் வந்து, இப் பாறையிற்பிரமசரியஞ் சிறந்தயவஷன்ஒருவன் உள்ளனன். பாறையை ஒரு கற்புடையாட்டி தொட்டால் அவன் அகல் வன்' என்று கூறக் கேட்டுத் தன்னாட்டுள்ள உயர் குடிப் பெண்டிர்' பலரையும் பாறையைத் தொடும்படி செய்தும் பயனின்றான நிலையில் ஓர் வேட்கோக்குலத்து. (குயக் குலத்து) நற்பெண் சந்திராவதி என்பாள் நினையாது தொடநேர்ந்தவுடன், அப்பாறை இடம் பெயர்ந்த தென்றும், அதனாற் பிற மகளிர்பாற் கடுஞ்சினம் கொண்டு அவ்வரசன் அவரையெல்லாங் குடும்பத்தோடழித் தனன் என்றும் முதற்றரங்கம் (318 - 322) கூறுதல் காண லாம். இங்ஙனந் தெளியப்பட்ட கற்புடையாட்டியாகிய சந்த்ராவதி என்னும் நற்பெண் ஸதியாதலால் அந்நாட்டில் அவள் வழியில் வந்தவரும் அவளைத் தாய்போற் போற்றி ஆச்ரயித்தவரும், ஸதீயபுத்ரர், ஸத்யாச்ரயர் என்ற பெயர் பெற்றனரென்றும், அக்கச்மீர தேய வரலாற்றி னோடே பொருந்துதல் காணலாம். வேட்கோக் குல மகளைத் தெய்வமாக வழிபட்ட நாடு வேள்புலம் எனக் கொள்ளப்பட்டு அந்நாட்டவர் வேளிரென வழங்கப்பட்ட ரென்பதும் இயைதல் காண்க. இவ்வேளிர் மகளிற் கற்பி னாற் சிறந்தவரென்பது. இவருடைய நல்லொழுக்கங்களை நேரிற்கண்டு அருமை பாராட்டிய நல்லிசைப் புலவர் வேள் பாரி நாட்டைக் கூறியவிடத்து அந்நாட்டு வேண் மகளிர் கற்புடமையையே எல்லா நாட்டிலுஞ் சிறப்பித்துப் “பிற நாட்டுப் பெண்டிர் முடிநாறும் பாரி - பற நாட்டுப் பெண்டிரடி” என்று உலகறியச் சாற்றுதல் கண்டு உண்மையுணரலாம். இப்பறநாட்டுப் பெருங் கொற்றனா ரும் அகப்பாட்டில் (323) “தடவரவொதுக்கஞ் தகைகொள வியலிக்காணிய அம்மோ கற்புமேம் படுவீ எனப் பாடிய தனையும் ஈண்டைக்கு ஏற்ப நினைக. நாட்டார் கற்புடை