பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ரா. இராகவய்யங்கார் 39 யலாம். ஆதியில் யக்ஷிக தேசமாகி அதுவே ஈகை நாடெ னப்பட்டு அதன்கண் உள்ள துவராவதி ஈகைத்துவரை எனக் கூறப்பட்டதெனத் துணியலாம். இதனாற் குசஸ்தலி த்வாரவதியாகிய கண்ணபிரான் ஊரைவிலக்கியதாமென்று கொள்க. கண்ணபிரான் துவரை ஓகை மண்டலத்துள்ள தாய் ஓகைத் துவரை என்பது கருதி, அஃதல்லாமைக்கு ஈகைத்துவரை என்றாரெனக் கொள்க. (Imperial Gazetteer vol.26) Map of Sind & Baroda. பார்க்க) எங்ஙனங் கொண்டு நோக்கினும் இவ்வரிய கபிலர் புறப்பாடலிற் குறித்தன முழுதும் கச்மீர தேச சரித்திரத்தொடு நன்கியைந்து பண்டை வரலாற்றுண்மை விளக்கி நிற்றல் கண்டு கொள்க. மகாபாரதம் கர்ணபர்வம் 41ஆம் பகுதி யில் வாஹி என்றும் ஹீகா என்றும் இருவகைப் பிசாச குலம் உண்மை கேட்கப்படுவது. அந்த ஹீக ஜனர் ஆதியில் இருந்தது பற்றி ஈகை நாடு இஃதாயிற்று. ஈகைத் துவரை என்பதனால் நாடு குறித்து ஊர் குறித்தாரென்பது நன்கு பொருந்தும். துவாரபதி: ராஜதரங்கினியில் கண்டது ஈண்டுக் குறித்த துவரை யாகிய துவாரவதியைப் பற்றிக் கஸ்மீர ராஜதரங்கினி மொழி பெயர்த்த கனம் M.A.Steine என்பவர் கூறுவதை இங்கே தருகிறேன். 'இவ்வாறு குறிக்கப் பெற்ற பழைய.எல்லைப் புறத்தின் கீழ் உள்ள பள்ளமான நிலம் இப்பொழுது துவாரபதி என்று வழங்கப்படுகின்றது. அதன் பழைய பெயர் ராஜதரங்கினி யின் பழையவுரையொன்றால் நமக்குக் கிடைத்துள்ளது அவ்வுரை பொலியசாகை என்பது துவாரவதிக்குள் உள்ள தாகக் கூறுகின்றது. இத்தலத்துள்ளாரைக் கேட்டதில் பொலிய சாகாவிலிருந்து சிறிது தூரத்திலுள்ள ஒரு மேடே பழைய துவாரவதியின் கீழ் பாலெல்லையாக இன்றைக் கும் குறிப்பிட்டுக் காட்டப்படுவது அறிகின்றோம்.