பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

72 தமிழகக் குறுநில வேந்தர் என்றும் கருதுதல் ஏற்குமென்க. இவ் வளவரினின்று பல்லவர் பழையபடியும் வென்று தம் தொண்டை நாட்டைக் கைப்பற்றினர் என்று துணிக. இதுவே சரித்திர முறைக் கியைவதாகும். நூல்நய முறைமையான் ஆராயின் பெரும்பாணாற்றினும் பட்டினப் பாலை பெரிதும் நயமிக்கதாகக் தோன்றல் நோக்கப்படுத லான் இப் புலவர் பெரும்பாணாறு பாடி அதனினும் நயம் பட்ட தொன்றைப் பின்னர்ப் பாடினர் என்பதே பொருத் திற்றாகும். இனிப் பெரும்பாணாற்றில் "அந்நீர்த் திரைதரு மரபி னுரவோ னும்பல்” என்ற அடியில், அந்நீர்த் திரைதரு மரபும் அம்மரபில் ஓருரவோனும் அவ்வுரவோன் வழித் தோன்றியவனும் கூறப்படுதல் நன்கு அறியலாம். இதன்கண் அந்நீரென்றது. கடலைக் குறித்ததாம். முன்னரே முந்நீர் வண்ணன் பிறங்கடை யென்று. கூறிப் பின்னர், அந்நீரென்றது அம் முந்நீரைச் சுட்டிய தாதல் எளிதில் அறியத்தகும். இதனால் "அந்நீர்த் திரைதரு மரபு" என்பது கடலலை தரப்பட்ட குலம் என்றதாகும். இவ்வாறு ஓர் குலம் இந் நாவலந்தீவில் வழங்கப்படுதல் "அப்ஸரஸ்" (கடலான் உண்டாக்கப்பட்ட தேவ கணிகையர் என்பது பொருள்). குலவழக்கால் அறியலாம். இவருண்டான வரலாறு வான்மீகம் பாலகாண்டம் 46ஆம் ஸர்க்கத்துள் 34-முதல் 37-வரையிலுள்ள சுலோகங்களிற் காண்க. இத்திரை தரு மரபின் உரவோன் என்றது இப் பல்லவ சாசனங்கள் பலவற்றிற் றங்குல முன்னோன் வரிசையிற் காணப்பட்ட துரோணனையும், அவ்வழியில் அசுவத்தாமன் மகனாகிய பல்லவனையும் குறிப்பது என்று துணியப்