பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ராகவய்யங்கார் 75 இருக்கு வேதத்தில் அர்ண என்பவன் ஓர் பழங்குடித் தலைவனாகக் கேட்கப்படுகின்றான். அவ்வழியினன் அர்ணிகன் என்னும் அமையும். அணிகன் என்னும் பெயர் வழக்கு இக்குடியினரிடம் நெடுங்காலத்துக்குப் பின்னும் வழங்கிய தென்பது செயங்கொண்டார், "மறிந் தோடி யெவ்வரசுஞ் சரியவென்று வருமணிகப் பல்லவர் கோன்” எனப்பாடுதலான் அறியலாகும். அணிகப் பல்லவர்- அர்ணிகப் பல்லவர் எ.று. கடலில் வந்த மகள் மரபிற் பல்லவத்திலீன்றதனாற் பெயர் பெற்ற குடிமையுடையர் என்க. இந்த அர்ணிகன் என்னும் பெயரே தமிழில் திரையன் என மொழி பெயர்த்து வழங்கப்பட்டதென்று நினைத்தல் தகும். செயங்கொண்டார் தாழிசையில் ‘‘அணிகைப பல்லவர் கோன்” என்று பாடங்கொண்டாலும் அர்ணிகை அணிகை யென்று வந்ததாகக் கருதி நீரில் வந்தவன் வழியினன் பல்லவர்கோன் என்று பொருள் கூறிச் செல்க. இக்குல வரலாறு தெரியப் படாமையால் அணிக்கைப் பல்லவ ரென்றும் அணுக்கப் பல்லவ ரென்றும் பாடம் சிதைத்து வழங்கப்பட்டு அதுவே சாசனங்களிலும் எழுதி வெட்டப் பட்டதோ என்று நினைத்தற்கு இடமுண்டு. அணிகப் பல்லவரைக் குடிப்பெயர் மறைந்து சோழர்க்கு அடங்கிய நிலையில் அணுக்கப் பல்லவரென அவர் செய்ற்கேற்ப மாற்றி வழங்குவது எளிதேயாமென்க. இதற்கேற்பவே தெள்ளாறெறிந்த நந்தி பல்லவனைப் பாடிய கலம்பகத்தில், 'நந்திவீர வணிகனைப் போய் (47) என்பதனால் அணிகன் என்று வழங்குதல் காணலாம். ஈண்டு வணிகன் என்று கொள்ளாமைக்கு வீர விசேடண மிட்டாரெனத் தெளியலாம்.