பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

$76 தமிழகக் குறு நில வேந்தர் இங்கு “வீரவணியனைப் போய்" என்று பாடங் கொண்டு இந் நந்தி பல்லவனை *“வன்னியன்” என்று வழங்கினர் என்பாரும் உண்டு. வன்னியன்-வனமாகிய நீரில் வந்தவன் என்று பொருளா தலான் அஃது அர்ணிகன் என்னும் பெயர்ப் பொருளின் வேறாகாமை குறிக் கொள்க. இதுவே பொருள் என்பது 'சொரிமுத்து வன்னியன் என்னும் பெயர் வழக்கானுணரலாம். சொரி முத்து வனம் கடல் என்பது தெள்ளிது. சொரிமுத்து வன்னிக்குப் பொருந்தாமல் வனம் ஆகிய நீர்க்கே பொருந்துதல் உய்த்துணர்க. இனி இப் பல்லவரை நீரின் வந்த வன்யர் எனக் கொள்ளாது நெருப்பாகிய வன்னியினின்று வந்தவரென்று கூறுவாருமுண்டு. அது, "நங்கள் கோத் தொண்டை வேந்த னாம வேன் மன்னர்க் கெல்லாம் தங்கள்கோன் கங்கை நாடன் சந்திர குலப்ரகாசன்" (நந்திக் கலம்பகம். 49) அவனைச் சந்திரகுல விளக்காகக் கூறுவதோடு பகைத்தல் உணர்க. என தாண்டையர் சூரியகுலச் சோழர் குடியினர் என்பதும் பொருந்தாமை இதனானே துணியலாம். நந்தி பல்லவனை இக்கலம்பகம் உடையார் “கங்கை நாடன்" என்று பாடுதலான் இவன் முன்னோர் கங்கைக் கரை நாட்டினராதல் தெளியப்படும். இப் பல்லவ முன்னோன் துரோணன் என்பதும் அவன் வடகங்கை உத்தர பாஞ்சாலத்தை யாண்டவன் என்பதும் மகா பாரதத்தாற் றெரியப் படுதலால் அதற்கியையக் "கங்கை நாடன்" என்று பாடங்கொள்வதே சிறந்ததாகும். ஈண்டு அங்க வந்யன்-வனத்தில் வந்தவன்