பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

80

தமிழகக் குறுநில வேந்தர் இனிக் குவத்ரோணன்” என்ற சொற்கண் குவம் என்பது நீரிற் பிறப்பதற்குப் பெயர். இதனால் நீரிற் பிறந்த துரோண குலத்தவன் என அவன் தன்குடிப் பிறப்புப் பெயரைப் புனைந்தது தெரியலாம். இவ்வாறு கூறுவது தன் குடி முதல்வன் கர்ப்பவாசமறியாதவன் என்பது கருதிப் போலும். துரோணர் பரத்வாஜருக்குக் கருப்பாசயத்திற் றங்காமற் பிறந்தார் என்பது பாரதம். (ஆதி பர். பக். 250). இப்பல்லவர் துரோணகுல வீரர் என்பதற்கியைய இவ் வாசிரியர் இந்நூலுள் இத்திரையனை “வாடாத் தும்பை வயவர் பெருமகன்” என்கிறார். இதன்கண் வாடாத் தும்பை வயவர் என்பது “வாடா வஞ்சி” கருவூராதல் போலவும் (புறம் 39) “வாடாவள்ளி” (பெரும்பாண் 370) என்பது ஓர் கூத்திற்காவது போலவும் துரோண குல வீரரை உணர்த்துவது என்று கொள்க. தும்பைக்குத் துரோணம் என்பதும் பெயராதல் பிங்கல நிகண்டில், “தும்பையும் பதக்குந் துரோண மர்கும்' என்னுஞ் சூத்திரத்தானறியலாம். (பிங். 3660) இங்குக் கூறும் தும்பைச் செடியன்று என்பதற்கு வாடா என்று விசேஷித்துக் காட்டினார் என்க. நச்சினார்கினியர் “வாடாவள்ளி” என்பது வாடுங் கொடியினையுடைய வள்ளியல்லாத வள்ளிக் கூத்து” எனப் பெருமபாணா ற்றிற் பொருள் கூறுதல் காண்க. இவ்வாறு பொருள் உணர்த்தல் தமிழ் வழக்கே என்பது ‘துவ்வா நறவு" (நறவு என்னும் ஊர்) (பதிற்று. 60) “பரிவேட் பஞ்சா அயிரை’ (அயிரை என்னும் மலை) (60g. 21). "ஊராதேந்திய குதிரை" (குதிரைமலை. புறம்.158) "மிதியற் செருப்பு" (பதிற். 21), “இரும்பு புனைந்தியற்றாப் பெரும்பெயர்த் தோட்டி” (புறம். 150) என வருவன கொண்டுணர்க.