பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ரா. இராகவய்யங்கார் ருக்குத் 85 தமக்குக் கிடைத்த ஆக்னே யாஸ்திரத்தைக் கொடுத்தார்” என வருதலானறியலாம். மகா பாரதம் பீஷ்ம பர்வம் 50-ஆம் அத்தியாயத்தில் இப் பரத்வாஜ முனிவர் வழியினராகிய இரு திறத்தாரை யும், அக்னிவேச்யரும் துஹுண்டரும்” என்று குறித்தல் காணலாம். இதன்கண் அக்னிவேசஸ்து, ஹுண்டாஸ்ச என்று பிரிப்பதும் உண்டு. அக்னிவேச்யர் துரோணர் என்று கூறப்படவேண்டியவரே. ஈண்டு அக்னிவேச்யர் துஹுண்டர் எனப்பட்டனர் என ஊகித்தலாகும் துரோண குலத்தவர் நெடுங்காலத்திற்கு முன்னே அவ் வடநாட்டிலே துஹுண்ட குலத்தவரென வழக்குப் பெற்றனர் என்று நினையலாகும். துரோணஜா என்பது துஹுண்ட மாறிப் பின்னும் மைதிலி மொழியில் ெ தாண்ட எனத் திரிந்ததென்று கொள்ளலாம். ST OST துரோணஜா என்பதே தொண்டையர் எனத் தமிழ் வழக்குப் பெற்றதாதல் இதனாலறிக. அக்னிவேச் யரையும் துஹுண்டரையும் சேரக் கூறுதல் அவ் விரு திறத்தரும் ஒரு தந்தை மரபில் ஸஹோதர வழியினராதல் பற்றி என்று எளிதிலுணரலாகும். இவ்வுண்மையினா லன்றே நந்திக் கலம்பகத்தில் "தெ-ண்டையன் தொண்டை” என வந்ததெனத் துணிக. தொண்டைக் குலத்தவன் தொண்டைமாலையென்பது அதன் பொருளாகும். பரத்வாஜருக்கு கிருதாசி என்னும் நீரரமகளிரினின்றுண்டாகிய துரோணரும், கௌதமருக்கு ஜரலவதி என்னும் நீரரமளினின்றுண்டாகிய கிருபியும் சேர்ந்து அச்வத்தாமாவைப் பெற்றார் என்பது மஹா பரரதமாதலின் (ஆதிபர்வம். 140-ஆம் அத்யாயம்) இத் துரோண மரபு திரைதரு மரபாதல் கண்டுகொள்க. அம் மரபில் அச்வத்தாமாவிற்கு மதனி என்னும் நீரரமகளி டத்தில் உண்டாயினவன் பல்லவன் என்று அமராவதிச் த.கு.வே-6