பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ரா. இராகவய்யங்கார் னுடையதாகக் காரவேலா சாசனம் கூறுவது. 87 அருவ ராஜா என்பது அவராஜா என் மரீஇயது போலும், இதைப் பூவராஜா என்று படிப்பதும் உண்டு. பூர்வராஜா-முன்னை வேந்தன். இக் காரவேலாவின் காலம் கி.மு. 157 என்பர். இந்தப் பிதுண்ட நகரம் பிறருக்கு அச்சஞ் செய்யும் துஹுண்டராற் பெயர் பெற்ற தாம் என்று நினையலாம். இவர் கிருஷ்ணவேணி நதிக் கரையிலுள்ள தானிய கடகத்தும், கச்சியிலும், ஆட்சி செலுத்தினராவர். இவர் வடநாட்டுக் கொண்ட துஹுண்ட குலப் பெயரை ஊருக்கும் தமக்கும் கொண்டு வழங்கியது புலனாகும். நிற்க, இவர்க்குத் தொண்டைமாலை யேற்பட்டது அசுவத்தாமன் மதனி என்னுங் கடல்கெழு செல்வியை விழைய அவள் அவனுக்குண்டாகிய மகவை அசோக மரத்தடியிற் பல்லவப் பாயலி லீனுதலான் அக் காலந் தொட்டு ஆம் என்றுநினைத்தலும் தகும். அசோக மரத்திற் படர்ந்த பிம்ப பல்லவங்களை (தொண்டைப் பாசிலையை) அக்குழவிக்குப் பாயலாக்கி அதன்கண் வளரவிட்டா ளென்று கொள்ளலாம். அதுதொட்டு அப்பல்லவனும் அவன் வழியினரும் அத் தொண்டையை மாலையாகப் போற்றிக்கொள்ளலாயினர் என்க. இஃது ஆதொண்டை யன்றென்பது கோவையேய் நந்தி என்பதனானும், “செங்கோன் மாயன் தொண்டையங் கனிபோற் என்பதனானும் ‘‘அவனி நாரணன் றோட்கு லாமது மலர்த் தொண்டை வாய்ச்சியர்” சிவந்து" என்பதனாலும் நன்கறிக. இத் தளிரிற் பல்லவன் வளர்ந் தனன் என்பது,